Posts

Showing posts with the label தொடர்./ கட்டுரைகள்/பொது/

*யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு பிப்ரவரியிலிருந்து பணம் கொட்டப்போகிறது!*

Image
  *யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு பிப்ரவரியிலிருந்து பணம் கொட்டப்போகிறது!* பிப்ரவரி முதல் தேதியிலிருந்து யூடியூப் நிறுவனம் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்கி வழங்குபவர்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்துகொள்ள உள்ளது. புதிய திட்டம் மூலம் ஷார்ட்ஸ் பகுதியில் வீடியோக்களுக்கு இடையே பார்க்கும் விளம்பரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். முன்னதாக இருந்த யூடியூப் ஷார்ட்ஸ் 60 விநாடிகளில் ஒரு விஷயத்தை வீடியோவாக வெளிப்படுத்தும் போக்கை டிக் டாக் தொடங்கி வைத்து பெரியளவில் பார்வையாளர்களை கவர்ந்தது.  அதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரிலும், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற பெயரிலும் தங்கள் தளங்களில் வழங்குகின்றன.  இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டதால் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் சக்கைப்போடு போடுகிறது.  காமெடியான குறு வீடியோக்கள், பாடல்கள், செல்லப் பிராணிகளின் சேட்டைகள், உணவுக் கடைகள், சமையல் குறிப்புகள், வயது வந்தோருக்கான ஜோக்குகள், வீடியோ மீம்கள், அரசியல் கருத்துகள் என பலவும் இதில் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. யூடியூப் நிறுவனம் இத்தகைய ஷார்ட் வீடியோக்களுக்கு என ஒரு நிதியை ஒதுக்கி வந்...

உயிர்கொல்லி ஆழிப்பேரலை.

Image
 உயிர்கொல்லி ஆழிப்பேரலை. ஆழிப்பேரலை ஊழிக் கூத்தாடிய அந்நாள் இந்நாள் தானே  டிசம்பர் 26 ஆகுமோவென அடியெடுத்து வைப்பதற்குள் அள்ளிச் சென்று அலறவைத்தாய்! ஓடிப் போங்கள்  என்பதற்குள் ஓடி வந்தே உயிர் குடித்தாய் ஓயவில்லை இன்னும் ஒப்பாரி  இன்றும் ஓயாத அலைகளாய்  உன் கோரத்தின் நினைவுகள் தொண்டைக்குள் அடைக்கிறது! உன் மடியில் பிடித்து வரும் மீன்களை உண்டு வாழ்ந்திடும்  மக்களை நீயேன் தின்றாயோ அடங்கியதோ உந்தன் அடங்காப்பசி ஒடுங்கியதே எங்கள் நிம்மதி  ஆடிப்போன உன் ஆட்டங்கண்டு! காதல் பேசி நின்ற கடலலையே ஊடல் கொண்டு ஏன் வந்தாய் கூடல் செய்து நின்றவனை கூட்டிப்போக ஏன் நினைந்தாய் பூட்டிப்போ உன் கதவுகளை  மாட்டிக் கொள்ள மனமில்லை! ஏலேலோ பாடிப்பாடி உன்னை மார்போடு அணைத்தவனை ஏமாற்றி சென்றதென்ன பார் போற்றும் அன்னையென உன் மடிமீது விழுந்தவனை அலைக் கரத்தாலே வளைத்ததென்ன! மீண்டும் வருவதாய் எச்சரிக்கிறாய்  வருவதாய்  இருந்தால் வந்துவிடு இருக்கும் அனைவரையும் கொன்றுவிடு எஞ்சியோர் இருப்பின் துன்பியலே இனியொரு துன்பம் வேண்டாமே இயல்பாய் நீ இருந்துவிடு! இயற்கை உன் நியதிகளை வகுத்தவன் இறை...

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொட்டும் மழையில் சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள்

Image
* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொட்டும் மழையில் சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள் : பேட்டரி வாகனம் வழங்க கோரிக்கை* தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துத்துவமனை, கடந்த 1964ம் ஆண்டு கட்டப்பட்டது. வடசென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு தினமும் உள்நோயாளிகளாக 2,000 பேரும், புறநோயாளிகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் இதயம், கல்லீரல், நரம்பியல், சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. தமிழகம் மட்டுன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், உயர் சிகிச்சை பெறுவதற்காக 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் விபத்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் இறந்தவர்களின் சடலங்கள், அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மருத்துவமனையில் இருந்து இந்த பிரேத பரிசோதனை கூடம் 200 மீட்டர் தூரத்தில்  அமைந்துள்ளது. இங்கு சடலங்களை ஸ்டெச்சரில் வைத்...

அங்கீகாரம் என்பது

Image
  அங்கீகாரம் என்பது ஒருவரின் திறமை கண்டறியப்பட்டு தகுதி உடையவர்களுக்கு தகுதி உடையவர்களால் தானாக வழங்கப்படும்போதுதான் அதற்கு மரியாதை. இப்போதெல்லாம் பெயர் தெரியாத ஏதோ சில பல்கலைக் கழகங்கள் பிரபலங்களைத் தொடர்புகொள்கிறது. உங்களுக்கு முனைவர் பட்டம் தருகிறோம் என்று ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு விழா எடுத்து அதை வழங்க இருக்கிறோம்.. விழா செலவுகளில் கொஞ்சம் மட்டும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் என்கிறது. முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று கேட்கிறது. அனுப்பிவிட்டால் கோலாகலமாக முனைவர் பட்டம் கிடைத்துவிடும். விழாவுக்குச் சென்று பார்த்தால் இப்படி பணம் கட்டியவர்கள் பலரும் வரிசை கட்டி நிற்க..பிட் நோட்டீஸ் மாதிரி சகலருக்கும் வழங்கிவிடும். இது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் வளரும் எழுத்தாளர்கள் சிலர் பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்பிவிட்டு அவர்களாகவே அவை ஆகச் சிறந்த படைப்புகள் என்று கருதிக்கொண்டு என் கதையை ஏன் போடவில்லை, எனக்கு ஏன் இன்னும் தொடர்கதை வாய்ப்பு தரவில்லை என்று போன் செய்து சண்டை போடுகிறார்கள். எங்கள் காலத்தில் பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்பிவிட்டு காத்திருப்போம். மூன்று மாதங்கள் கழித்துகூட திரும்பி வரும...

இன்று உலக சிக்கன நாள்

Image
  இன்று உலக சிக்கன நாள் ! இன்று ஒரு நாள் மட்டும் சிக்கனமாக இல்லாமல், வாழ் நாள் முழுக்கவே சிக்கனமாக இருங்கள். தண்ணீர், மின்சாரம்... என்று எல்லாவற்றிலும் சிக்கனமாக இருங்கள். 'யூஸ் அண்ட் த்ரோ...' எனும் 'தூக்கி எறியும்' வாழ்க்கை முறையை மாற்றி, 'ரீசைக்ளிங்' எனும் மறுசுழற்சி முறையை கடைபிடியுங்கள். உங்களின் சிக்கனம்... உங்கள் சந்ததிகளை நலமாக வாழ வைப்பதோடு, உலகத்தின் வாழ்நாளையும் அதிகரிக்கும்

உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று

Image
உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும். பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம், கால், கை செயல் இழந்து போதல். இந்த நிலை எப்படி வருகிறது என்றால் நம் மூளையின் ஒரு பாதிக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ ரத்த ஓட்டம் தடைப்பட்டால் அல்லது அந்தப் பகுதி மூளை அதன் செயலாற்றலை இழந்துவிடும். அதனால் கை, கால்கள் செயல் இழந்து நோயாளி படுத்த படுக்கையாகிவிடுவார். சிலருக்குப் பேசும் திறன் அற்றுப்போகும். ஆதலால் இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மூளையைக் காப்பாற்றி நோயாளியை நிரந்தர ஊனத்திலிருந்து காப்பாற்றலாம். இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே, அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் பாதிக்காதவாறு, உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். புகை, மது பழக்கத்தை தவிர்க...

வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று

Image
வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர்.   அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.   இவர் இயற்பெயர் ரங்கராஜன்.  இவர் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.  இவர் சிவாஜி, எம் ஜி ஆர் காலம் தொடங்கி தற்போதைய கதாநாயகர்கள் நடித்த படங்கள் வரை பல தலைமுறையாக புகழ் பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர். 1958ஆம் வருடம் அழகர்மலைக்கள்ளன் என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதினார்.   ஆனாலும், 1963ஆம் வருடம் வெளியான கற்பகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் புகழ் பெற ஆரம்பித்தார்.    எம் ஜி ஆரின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து எம் ஜி ஆரின் கொள்கைப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.   இவரின் பல பாடல்கள் அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கண்ணதாசன் பாடல்கள் என்றே பலரும் கருதினர்.    எம் ஜி ஆருக்கு மட்டும் இன்றி அப்போது புகழ் பெற்ற கதாநாயகனான சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதி உள்ளார். அன்று தொடங்கிய அவர் கலைப்பயணம் பல தலைமுறைகளைத் தாண்டிய...

தமிழ்’ உங்களை என்றும் கைவிடாது’

Image
  மதன் விகடன் இணையாசிரியராக அவரை விகடன் பொன்விழா முதற்கொண்டு பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன். மறக்கமுடியாத நிகழ்ச்சி என்றால் ஒருமுறை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில், விகடன் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த ஓவியர்களைக் கொண்டு அவரை ஓவியமாக வரைவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். சிறந்த ஓவியர்கள் தன்னை வரைவதற்கு ஏதுவாக ஒரு மாடல் போல அமர்ந்திருந்தார். எதிரே பல ஓவியர்களும் அவரை சீரியஸாக வரைந்து கொண்டிருந்தார்கள். ‘நான் கொஞ்சம் அசையலாமா?’ என பவ்யமாகக் கேட்டவரிடம் ‘உங்கள் இஷ்டம் போல் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள்... அவர்கள் வரைந்து கொள்வார்கள்!’ என்றேன். அவரருகே அமர்ந்து நானும் ஓவியர்களின் பணியை ரசித்துக் கொண்டிருந்தேன். என் பக்கம் திரும்பியவர், ‘நீங்கள் என்னை வரையமாட்டீர்களா? நீங்களும் ஓவியர்தானே?!’ என்றார். ‘நான் ஒரு கார்ட்டூனிஸ்ட். இவர்களைப் போல தொழில் முறையில் படித்து ஓவியனானவனல்ல... எனக்கு கார்ட்டூன்தான் போடத்தெரியும்' என்றேன். உடனே, ‘அதைத்தான் செய்யுங்களேன்’ என்றார். சொன்னதோடு நில்லாமல் உள்ளிருந்து பேப்பரும் பேனாவும் வரவழைத்து என்னிடம் நீட்...

ஜெயலலிதா இறப்புக்கும் முந்தைய 28 மணி நேரத்துக்கும் இடையே நடந்தது என்ன? -

Image
ஜெயலலிதா இறப்புக்கும் முந்தைய 28 மணி நேரத்துக்கும் இடையே நடந்தது என்ன ? -  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மருத்துவமனையின் என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இதோ: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 4.12.2016 அன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மறைந்த முதல்வரின் சிகிச்சை அறையில் சலசலப்பு நிலவியதாகக் கூறினார். செவிலியர் மகேஸ்வரி, தான் பிற்பகல் 2 மணியளவில் பணிக்கு வந்ததாகக் கூறினார். அவரிடம் ஜெயலலிதா தொலைக்காட்சியை அணைக்க சொன்னதாகவும், சிறிது நேரம் கழித்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். (பக்கம் - 532, 46.63) 4.12.2016 அன்று, நளினி என்ற தொழில்நுட்ப ஊழியர், பிற்பகல் 3.50 மணிக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு ECHO ஸ்கேன் எடுத்தார். ஆனால், எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என அவர் சா...

*ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்" - ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய மரண அறிக்கை*

Image
  *ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்" - ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய மரண அறிக்கை* முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.' அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. இது ஒரு முக்கியஸ்தரால செய்யப்பட்ட மாபெரும் குற்றம். அப்போதைய முதல்வர் உயிர் தொடர்பானது என்பதால் அதன் விளைவுகளை நிச்சயம் பெறுவார்.எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்...

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223வது நினைவுநாள்

Image
*சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223வது நினைவுநாளை முன்னிட்டுகயத்தாரில் உள்ள மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.நிகழ்ச்சியில் கயத்தார் வட்டாட்சியர் சுப்புலட்சுமி, கயத்தார் காவல்நிலைய ஆய்வாளர் முத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.*

*கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்*

Image
 * கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்* ஒரு காலத்தில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏவுகணை தொழில்நுட்ப பரவலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆர்.-ன் கெடுபிடியால் இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம், தளவாட உதவிகள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் தலைமையில் கடந்த 1983-ம் ஆண்டு, தேடித் தாக்கும் (Guided missiles) ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. கலாமின் வழிகாட்டுதலில் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே தேடித் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. கலாம் விதைத்த விதையால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா இப்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தொலைவு சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளுக்கான ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியது மிகப்பெரிய சாதனையாகும். அதாவது ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர் பயணித்துவிட்டு பின்னர் வானில் இருந்து பூமி நோக்கி திரும்பி இலக்கை தாக்கி அழிக்கும். சூப்பர் கம்ப்யூட்டர், ஒரே நே...

சுறுசுறுப்பான - அதுவும் மனதில் பட்டதை ஓப்பனாக பேசும் முதலமைச்சர்.

Image
  சுறுசுறுப்பான - அதுவும் மனதில் பட்டதை ஓப்பனாக பேசும் முதலமைச்சர். ஆனால் மந்தமான செய்தித்துறை : பத்திரிகையாளர் நலன்கள் படுகுழியில் : காரணமான ஜெயசீலன்- வெறுப்பில் பத்திரிகையாளர்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபோது பல்வேறு துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் ஊடகங்கள் மூலம் மக்களிடம் எளிதில் போய் சேர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கும் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டார். இளைஞர், தமிழ் வழியில் பயின்று, இந்திய குடிமையியல் அதிகாரி ஆனவர் என்ற அடிப்படையில் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு நியமிக்கப்பட்ட ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்-சின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே விமர்சனத்திற்கு உள்ளாயின. அனுபவம் வாய்ந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தபோதும் தமிழக அரசின் முக்கியமான செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறைக்கு போதிய அனுபவம் இல்லாத ஜெயசீலனை நியமித்ததை பலரும் விரும்பவில்லை. அதற்கெற்றார் போல், அவரின் செயல்பாடுகளும் அமைந்தன. தன்னுடைய துறையில் பழுத்த அனுபவம் மிகுந்த, மூத்த அதிகாரிகள் இருந்தும் அவர்களை மதிக்காமல் செயல்படுகிறார்...

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின்று!

Image
  பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின்று! பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூகமாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாயந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும். இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந...