Posts

Showing posts from November, 2022

*யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

Image
 *யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.* மயங்கி விழுந்து உயிரிழந்த புதுவை யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் தொடக்கம். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்பு. யானை மரணம் குறித்து விசாரணை -நாராயணசாமி வலியுறுத்தல்* புதுச்சேரி:புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:- யானை லட்சுமி முறையாக பராமரிக்கப்பட்டது. இருப்பினும் பீட்டா அமைப்பினர் யானையை காட்டில் விட வேண்டும் என்று கூறிய போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து யானையை முறையாக பராமரிப்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தெரிவித்தோம். யானையை கோவிலில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தோம். தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துள்ளது. யானை லட்சுமி நம்மை விட்டு பிரிந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வதிக்கின்ற இந்த யானை இப்போது நம்மிடம் இல்லாது மிக பெரிய அதிர்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்க

முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம் /அமைச்சர் பிடிஆர் செய்வது . /அதிமுக அரசை விட மோசம்

Image
  அமைச்சர் பிடிஆர் செய்வது சரியல்ல.. அதிமுக அரசை விட மோசம்..  முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம் இன்றைய தமிழக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, முந்தைய அதிமுக அரசை விட மோசமாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்குடனும் செயல்படுவதாகவும் நியாயமான கோரிக்கைகளை கூட உதாசீனப்படுத்துவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதே கால இடைவெளிகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ தொடர்பாக நிதி அமைச்சர்‌ தொடர்ந்து தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அகவிலைப்படி சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தவணைகளில் வழங்க வே

MALARVANAM, a monthly e-magazine Honouring ARTISTS

Image
 Artists honoured   MALARVANAM, a monthly e-magazine proudly celebrated its 3rd year anniversary on 27th November, 2022, at Stenographer’s Guild, T. Nagar.  The celebration also doubled as an Awards function in order to recognize some of the musicians and experts in other fields too. Ramki, Editor of MALARVANAM, welcomed the gathering. SNEHA NARAYANASWAMI rendered the prayer song.  The musical evening started with scintillating instrumental music played by the renowned Bulbuldhara musician Dr. K. G. Jawahar, who was honoured with “MALARVANAM BEST BULBULDHARA ARTIST AWARD”.   Mr. K. Srinivasa Rao, State awardee for wood crafts, was honoured with “MALARVANAM BEST WOOD CRAFTSMAN AWARD”.  A musical presentation of selective Ragaas highlighting Carnatic songs with relevant Tamil Cine songs (based on the same Ragaas) was provided by Vocalist Mr. S. Devanathan and Ms. D. Vidhyalakshmi, ably supported by the violinist Mr. Kedhar Vignesh and Mridhangam played by Mr. Anurag Ramakrishnan.   The a

கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Image
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப்பரிசை வழங்கினார்

தமிழக செய்திகள்,

Image
தமிழக செய்திகள்,30.11.2022 சென்னை: வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்* சென்னை: தமிழகத்தில் 1,000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து ரூ.420 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.* சென்னை: பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. கண்ணகிநகர் - ஈச்சம்பாக்கம் இடையே சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுழற்சலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.* சென்னை: சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்  டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என முதல்வர் கூ

*ஐயப்ப சாமிகளுக்கான 31 வழிபாடு விதிமுறைகள்

Image
 *ஐயப்ப சாமிகளுக்கான 31 வழிபாடு விதிமுறைகள் * விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். ஐயப்பன்மார் மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது. 1.  ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னிதானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும். 2 .துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது. 3.  பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூ

தரணியில் கலைவாணர் கலை வளர்த்தது புதுமை

Image
 கலைவாணர் என் எஸ் கே  வெள்ளித்திரையில் முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படம்  வெள்ளை உள்ளம் கொண்ட கலைஞனுக்கு தனியிடம்  நாடகத்தில் அடி எடுத்த போதே தனித்தன்மை  நடிப்பில் நகைச்சுவையே இன் நாடறிந்த உண்மை  இயல்பான தோற்றம் எளிமையில் இருக்கும்  எதார்த்தம் உடன் ரசிப்போம் எவருக்கும் பிடிக்கும்  இதயத்தை வருடும் அர்த்தமுள்ள பாட்டும்  இனிதாய் சொந்தக்குரலில் மாறும் பல மட்டும்  தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் தனி அடையாளம்  தன் மனைவி மதுர த்தோடு இணைந்ததும் நடிப்பாலும்  சிரிக்காத மனிதரில்லை படம் பார்த்த பின்னே  சிந்தனையில் உயர்வு ஒன்றே காட்டும் கண்முன்னே  கலைவாணர் பெயரிலே பிரம்மாண்ட அரங்கம்  வேறு கலைஞனுக்கு இல்லையே சென்னையில் ஒரு அரங்கம்  தமிழக அரசு செய்த தனித்துவ பெருமை    தரணியில் கலைவாணர் கலை வளர்த்தது புதுமை  முருக.சண்முகம்

*கைரேகை நிபுணர் தேர்வு: தேசிய அளவில் முதல் இடம் பிடித்து தமிழக பெண் எஸ்.ஐ. சாதனை..!

Image
  *கைரேகை நிபுணர் தேர்வு: தேசிய அளவில் முதல் இடம் பிடித்து தமிழக பெண் எஸ்.ஐ. சாதனை..!* தஞ்சை: தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சையை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் அமலா தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு தேசிய குற்ற ஆவண கூடத்தில் நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டில் இருந்து 174 பேரும் தேர்வு எழுதினார்கள். இவர்களில் தஞ்சை மாவட்ட காவல்துறையில் விரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அமலா இந்த தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமலா தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். எம்.எஸ்.சி. வேதியியல் பட்டம் பெற்ற இவர் கடந்த 2019ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) பணியில் சேர்ந்தார். தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவது மட்டும் அல்லாமல் குற்றவாளிகள் செய்த குற்றங்களை நிருபிக்க நீதிமன்றத்தில் சான்றிதழ் இவர்கள். மட்டுமே வழங்க முடியும் என்பது

*மகா சாஸ்தா ஐயனார் ஐயப்பன் வாகனங்கள் என்னென்ன?*

Image
 *மகா சாஸ்தா ஐயனார் ஐயப்பன் வாகனங்கள் என்னென்ன ?* சிவ விஷ்ணு குமாரனாகத் தோன்றிய மகா சாஸ்தாவுக்கு சிவபெருமான் பூதகணங்களை அளித்து அவரைக் காவல் தெய்வமாக ஆக்கினார். இந்திரன் அவருக்கு நூறு ஆனைகளை அளித்தான். அதனால் அவர் சதவாகனன் என்னும் பெயர் பெற்றார். அது முதல் அவர் ஆனை மேல் பவனி  வருபவராக இருக்கிறார். சாஸ்தா காவல் தெய்வமாக இருப்பதால் குதிரையும் அவருக்கு வாகனமாக இருக்கிறது. சாஸ்தாகோயில் முற்றத்தில் பெரியதாக யானை குதிரை வடிவங்களைச் செய்து வைக்கின்றனர். இந்த இடம் யானையடி குதிரையடி என்று அழைக்கப்படுகின்றன. சாஸ்தாவுக்கு யானை வடிவங்களை நேர்ந்துகொண்டு காணிக்கையாக அளிக்கின்றனர். ஐயனார் கோபுரங்களில் குதிரைகளை அளிக்கும் வழக்கம் உள்ளது. உண்மைப் போர் வீரனாக விளங்கி வீரசொர்க்கம் புகுந்த ஐயனாருக்கு குதிரையும் யானையும் ஊர்திகளாக இருக்கின்றன. அவர்கள் புலிகளை வாகனமாகக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் வளர்த்த புலிகள் அவர்களுடன் இருக்கின்றன. அத்துடன் அவர்களின் நாய்களும் இருக்கின்றன. ஐயப்பன் வழிபாட்டில் அவர் அரசகுமாரராக இருந்ததால் குதிரை ஏற்றத்திலும் கேரளத்திற்கே உரிய யானை வளர்ப்பிலும் பெரிதும் தேர்ச்சி பெற்றிருந்தா

200 ஆண்டுகளாக ‘சுவையில் அள்ளும் திருச்சி பூந்தி’*

Image
 200 ஆண்டுகளாக ‘சுவையில் அள்ளும் திருச்சி பூந்தி’* மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை எப்போதும் இனிப்புகளுடன் கொண்டாடி பழகியவன். அதிலும் அவனுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே அந்த இனிப்பான பலகாரங்களுடன் ஒன்றித்து இருக்கும்.  கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில் எத்தனை தொலைவில் இருந்தாலும் சட்டென்று சுண்டி இழுக்கும் அந்த நிறம் இன்றும் மாறாமல் தொடர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சியில். 200 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி காந்திமார்க்கெட் வளைவில் இருந்து மலைக்கோட்டை நோக்கி செல்லும் சாலையில் அமைந்துள்ள மிக பாரம்பரியமான கோவிந்தசாமி  பூந்திக் கடையை இன்று நிர்வகித்து வரும் மோகன் என்பவரை சந்தித்துபூந்தியின் வரலாறையும் அது பெரிய சைசில் உருவெடுத்த கதையையும் கேட்டோம்.  நான் அந்த காலத்து பழைய பியூசி படித்து விட்டு, என்னுடைய பெரியப்பாவின் தொழிலை கற்றுக்கொண்டு இந்த கடையை நடத்திட்டு வறேன். அந்த காலத்தில் கிராமப்புறங்கள், சிறு நகரங்கள்ல கோவில் திருவிழாக்கள்ல பெரிய கட மிட்டாய்னு, சீனில செய்த பலகாரத்தை ஏணிமாதிரி படிக்கட்டு செஞ்சு அடுக்கி வைத்து விற்பனை செய்வாங்க. பாக்கவே வண்ணமயமா இருக்கும். அதில முதல

தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்

Image
  இன்று (நவம்பர் 29-ந் தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள். தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர்.  நகைச்சுவையை திகட்டாத கருத்துகளால் வழங்கி, மக்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்க வைக்கவும் செய்தார். நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு, பிறர் மனதை புண்படுத்தாமல், சீர்திருத்த கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக்கூறிய அற்புத கலைஞர். அந்த காலத்தில் நடிகர்களை 'கூத்தாடிகள்' என்று அழைத்து கேலியும், கிண்டலும் செய்யும் நிலை இருந்தது. அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், சமூக அந்தஸ்தும் கிடைக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் முதல் காரணம். தன் இயல்பான நகைச்சுவையால் அந்த நிலையை மாற்றினார். என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை. தாயார் இசக்கியம்மாள். இளம் வயதிலேயே நாடக மேடை ஏறி நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் முதன் முதலில் வில்லுப்பாட்டை புகுத்தியவர் இவரே! காந்தி ம

வாரிவாரிக் கொடுத்த வள்ளல்... *உன்னதக் கலைஞன் கலைவாணர்*

Image
  நகைச்சுவை மன்னன்... சிரிப்பு மருத்துவர்...  வாரிவாரிக் கொடுத்த வள்ளல்...  *உன்னதக் கலைஞன் கலைவாணர்* 115ஆவது பிறந்தநாள் இன்று... (29.11.1908 - 30.08.1957) நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப் போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப் போராளி அவர்.  நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம்  மக்களை சீர்படுத்த முயன்றவர் கலைவாணர்  *நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்.* டென்னிஸ் பந்து பொறுக்கிப் போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு  கலர் சோடா வாங்கித்தந்து  நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி.  பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த  படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர்.

கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…!

Image
 #கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…! இந்திய கிராமப்புற மக்களின் 2 கோடியே 86 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன....! வரப்பு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சொல் தகராறு உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட வருடக் கணக்கில் கிராமத்து எளிய மனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ, அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும், கிராம மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008’ என்ற சட்டமாகும், இதுவே கிராம நீதிமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதே சட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் என்று வியாக்கியானமும் தரப்பட்டது. இது சட்டமாக்கப்பட்ட ஆண்டு 2008. நடைமுறைக்கு வந்த தேதி அக்டோபர் 2, 2009. இதற்காக யு.என்.டி.பி. எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி முகமை 2009 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை ரூ.44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்த அற்புதமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக  நடைமுறைபடுத்தப்ப

தொன்மங்களிலிருப்பது ஆணாதிக்கமா?

Image
  தொன்மங்களிலிருப்பது ஆணாதிக்கமா?  video link by

கார்த்திகை தீபத்தன்று என்னவெல்லாம் செய்யலாம் !

Image
கார்த்திகை தீபத்தன்று என்னவெல்லாம் செய்யலாம் !  மறந்தும் செய்யக்கூடாதவை ! video link Jaya TV Aanmeegam

வைணவ திவ்ய தேச உலா - 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில்*

Image
 108 வைணவ திவ்ய தேச உலா - 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில் * 108 வைணவ திவ்ய தேசங்களில், குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்தில் உள்ள துவாரகாதீசர் கோயில் 73-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கருப்புநிறம் கொண்ட கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. ஒகா துறைமுகத்துக்கு அருகில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் 13 பாசுரங்களைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பெரியாழ்வார் பாசுரம்: பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கானத்தே இருந்தானைக் கண்டார் உளர். மூலவர் : கிருஷ்ணர், துவாரகாநாதர் (துவாரகாதீசர்) | தாயார் : பாமா, ருக்மணி, ராதை | தீர்த்தம் : கோமதி ஆறு, ஸ்ரீசமுத்ர சங்கமம் | விமானம் : ஹேமகூட விமானம் தல வரலாறு: கம்ச வதம் முடிந்ததும் மதுராவுக்கு உக்ரசேனன் அரசனாக்கப்பட்டான். இச்செயல் மகஜ தேசத்து மகாராஜாவாக இருந்த ஜராசந்தனுக்கு கோபத்தை உண்

*நவக்கிரக தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை*

Image
 *நவக்கிரக தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை* பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. ‘நவ’ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். 'பாஷாணம்' என்றால் 'விஷம்' என்று பொருள். 'நவ' என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி, உபயோகிக்கும் தன்மையை சித்தர்கள் பெற்றிருந்தனர். ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும், தனித்தனியாக வேதியியல், இயற்பியல்பண்புண்டு. சித்தர்கள், அதில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பதை 'நவபாஷாணம் கட்டுதல்' என்பார்கள். 1. சாதிலிங்கம், 2. மனோசிலை, 3. காந்தம், 4. காரம், 5. கந்தகம், 6. பூரம், 7. வெள்ளை பாஷாணம், 8. கவுரி பாஷாணம், 9. தொட்டி பாஷாணம் என்பதே 'நவ பாஷாணங்கள்' ஆகும். இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்திருப்பதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுவதாக நம்பிக்கை. தமிழ்நாட்டில் பழனிமல

:சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?

Image
 :சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?* சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள், மறுபுறம் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.* சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள், மறுபுறம் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சீனாவில் இன்று(திங்கள்கிழமை) ஏறக்குறைய 40ஆயிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்று அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா தேசிய சுகாதார ஆணையம் வெளியி்ட்ட தகவலில், “ சீனாவில் இன்று ஒரேநாளில் 39,452 பேர் கொரோனாவில் பதிக்ககப்பட்டனர், இதில், 36,304 பேருக்கு அறிகுறியில்லாத கொரோனா இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 4ஆயிரம் பேர் கொரோனாவ்ல பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு போராட