``டாக்டர்.மு.வரதராசனார் கூறிய மூன்று மந்திரங்கள்'' - பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர். இவர் தன் `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பற்றிக் கூறுகிறார். ``அப்போது எங்களின் வீடு சென்னை, ராயப்பேட்டையில் இருந்தது. ராணி மேரி கல்லூரியில் 1965-ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சிக்கிட்டிருந்தேன். சுகிசிவம் அண்ணன் எம்.எஸ்.பெருமாள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் எல்லாம் எனக்கு கிளாஸ்மேட்ஸ். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா எங்கக்கூடத்தான் படிச்சாங்க, அவங்க தெலுங்கு இலக்கியம். மொழிப்பாடமான ஆங்கில வகுப்பில் ஒன்றாக அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்கு `இலக்கியத் திறனாய்வு' வகுப்பு நடக்கும். டாக்டர்.மு.வரதராசனார்தான் எங்களுக்கு வகுப்பெடுப்பார். இந்த வகுப்பில் கலந்துக்கிறதுக்காக பச்சையப்பன் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, மா