Posts

Showing posts with the label இலக்கியம்

பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது.

Image
  பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது. சந்தா தொகை ரூ.900 (தொள்ளாயிரம் மட்டும்) . ஏற்கனவே மின்னிதழுக்காக 500 ரூபாய் செலுத்தியவர்கள் தற்பொழுது 400 ரூபாய் செலுத்தினால் அடுத்து வருகின்ற 9 இதழ்கள், பிப்ரவரி முதல் அக்டோபர் வரை அச்சிதழ்கள் அவர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படும். அவர்கள் நவம்பர் மாதம் சந்தாவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதுவரை சந்தா செலுத்தாதவர்கள் முழுமையாக 900 ரூபாய் செலுத்துபவர்கள் 12 மாத இதழ் அவர்களுக்கு கிடைக்கும், அடுத்த வருடம் ஜனவரி வரை என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து சந்தாதாரர்களும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாசகர்களுக்கு மின்மினி இதழை அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் இதுவரை அளித்து வரும் பேராதரவிற்கு நன்றி ! மின்மினி 95519 99588 mkinminmini@gmail.com https://minmini.co.in/

முனைவர். லக்ஷ்மிப்ரியா

Image
முனைவர். லக்ஷ்மிப்ரியா    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!    ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!    வாணி சைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்    இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! என்று இத்தேசமெங்கும், ஏன் உலகெங்கும்கூட, கல்வியும் கலைகளும் ஓங்க வேண்டும், கலைவாணியின் கோயில்கள் பெருக வேண்டும் என்பது பாரதியின் உள்ளத் தவிப்பு. அந்த உள்ளத் தவிப்பைத் தன் உயிர்த்துடிப்பாகக் கொண்டுவிட்ட ஒருவர், முனைவர் லக்ஷ்மிப்ரியா! வாசிப்பில் ஈடுபாட்டுடைய அனைவருக்கும் வரும் ஆவல், தானும் வாசிப்பிற்குக் கதையோ, கவிதையோ, கட்டுரையோ நல்கவேண்டும் என்பது. "எல்லோருக்குள்ளும் ஒரு கதை உண்டு" என்கிறார் இந்த இளம்பெண். அவர்களில் பலர் அதனை எழுதுவதிலும் வெற்றியடைகிறார்கள். அதுவே தங்களுக்கு ஆனந்தம் அளித்த கலைவாணிக்குத் தாங்கள் செய்யும் பூஜையாகக் கருதுகிறார்கள். முனைவர் லக்ஷ்மிப்ரியாவும் எழுத்தாளர்தாம். அவர் சிறுவயதில் படித்துக் களித்த கதைகள் அவரை எழுதத் தூண்டின. அவர் நூல்கள் ஆக்கம் பெற்று, அச்சும் பெற்றுப் புகழுறும்...

பொங்கல் வாழ்த்துகள்| கவிஞர் முனைவர் ச.பொன்மணி

Image
  முருகு தமிழ் | பொங்கல் வாழ்த்துகள்| கவிஞர் முனைவர் ச.பொன்மணி video link by முருகு தமிழ்

நாங்கள் இரண்டு கவிஞர்களா? இரண்டு வசனகர்த்தாக்களா? இரண்டு நடிகர்களா?

Image
  சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று கவிஞர் #மனுஷ்யபுத்திரன் அவர்களைச் சந்தித்து அண்மையில் வெளிவந்த அவருடைய 12 கவிதை தொகுதிகளுக்காக என் வியப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். அசுர வேகம் அவர் வேகம். எவ்வளவு வேலைகளுக்கு இடையே இவ்வளவு கவிதைகள்? அல்லது இவ்வளவு கவிதைகளுக்கு இடையே எவ்வளவு வேலைகள்? அவர் உழைப்பைக் கண்டு மலைக்கிறேன் . 'இந்த வருடம் உங்க புத்தகம் என்ன வருது?' '#முக்கோண_மனிதன் ' கவிதைத் தொகுதி சார்.  'சூப்பர்.... சூப்பர்... கொண்டாங்க சீக்கிரம்...' அவருடைய முதல் நாவலான '#தாராவின்_காதலர்கள்' நூலை உயிர்மை அரங்கில் வாங்கிக்கொண்டேன். அவர் எப்போதும் போற்றும் எழுத்தாளர் #சுஜாதா வுக்கு நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். அது மிகப் பொருத்தமான ஒன்று . சுஜாதா இருந்திருந்தால் அவரே வெளியிட்டுப் பேசி   கணையாழியின் கடைசி பக்கங்களிலோ 'கற்றதும் பெற்றதும்' தொடரிலோ இந்நாவல் பற்றி எழுதி இருப்பார் . கவிதையும் உரையும் கலந்த புது முயற்சி. பின்னால் படமாக இருந்து நாங்கள் பேசியதைக் கேட்டுகொண்டு இருந்தார். அவருடைய கவிதை நூல்களை புதிய வீடு வாங்கிவிட்டு வாங்கிக் கொள்கி...

மகிஷாசுரமர்த்தினி/கவிதை../- தஞ்சைதவசி

Image
  பொம்மை அரசர்கள் போதிசத்துவராக முடியாது போகத்தின் தாளத்தில் பிசகிய விருவுப் பூனைகள் பிணமாக இருந்த பிணம் நாறுகிறது கிழிசல்மனம் தீர்த்துக்கட்டும் நடனம் மேய்ப்பர்கள் சுயவடிவம் மாகாளி சிவப்பின்தீவிரம் பதறும் பூமியின் தாழ்ப்பாள் களமாடும் திரிசூலி அரூபத்தில் மகிஷாசுரமர்த்தினி அஞ்சுவதும் அடிபணிவதும் அடிமாட்டுத் தொழுவம் போரில் காயங்கள் வலிப்பதில்லை அகாலம் விடியும் கலாச்சாரத்தின் கட்டுக்கதை காமத்தின் நிறம் நீலம் கட்டுமான வித்தகம் நிலையற்ற ஸ்திதி கழுகின்தடம் புனைவில் நடமாடும் கடவுள்கள் போதும்பா நடிப்பு அச்சத்துடன் நிகழ்காலம் விழித்திருக்கும் விளக்குகள் - தஞ்சைதவசி -

குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி நினைவு நாளின்று

Image
  குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி நினைவு நாளின்று “சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது. விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தங்கள் குலதெய்வமான முனீஸ்வரன் பெயரையே இவரதுப் பெற்றோர் இவருக்குச் சூட்டினர். திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்திருந்தார். 1935ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய குறளாரின் குறள் பரப்பும் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது. அக்காலத்தில் புராண இதிகாச நூல்கள் சோறு, குழம்பு போலவும் திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்திருந்தனர். இதனை மாற்ற வேண்டும் என்பதை தம் அடிப்படை நோக்கமாகக் கொண்ட திருக்குறளார், இதில் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாட...

ஒரு சருகின் பயணம்|இயற்கை கவிதை|nature tamil kavithai|Nynarin Unarvugal

Image
#kavithaitamil ஒரு சருகின் பயணம்|இயற்கை கவிதை|nature tamil kavithai|Nynarin Unarvugal video link

உடைகளை உருவும் இந்த கவிதை|Nynarin Unarvugal

Image
உடைகளை உருவும் இந்த கவிதை|Nynarin Unarvugal video link

சென்னை இலக்கியத் திருவிழா 2023

Image
 சென்னை இலக்கியத் திருவிழா 2023 தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்து ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பு அரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம்,  இத்தலைமுறை மாணவர்களுக்கான  பயிலும் அரங்கம், எதிர்கால தலைமுறைக்கான சிறுவர் இலக்கிய நிகழ்வுகள், சிந்தைக்கு விருந்தளிக்கும் நிகழ்த்து கலைகள் இன்னும் பல்வேறு நிகழ்வுகளுடன் சென்னை இலக்கிய திருவிழா வரும் ஜனவரி 6 முதல் 8 வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது!  நாள்: ஜனவரி 6-8,2023 நேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை  இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.  சென்னையின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் அன்புடன் வரவேற்கிறது.  அனைவரும் வருக! பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பு வழியாக பதிவு செய்யவும்:  https://forms.gle/imNVpZFEPaigwkbbA

இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம், இருப்பவை பகிர்வோம்,

Image
2022 ஆம் வருடத்தின் இறுதி நாட்களில் இருக்கிறோம்.!! இந்த வருடத்தில் என்னால் உங்களுக்கேதும் நன்மை நடந்திருந்தால் அதற்காக மகிழ்கிறேன், வருத்தமோ தீமையோ நடந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன்.!! காலம் மிக விசித்திரமானது, கலைத்து போட்ட சீட்டு கட்டு மாதிரி, முன் பின் தெரியாதவர்களை நண்பர்களாக்கும், நண்பர்களை பகைவராக்கும், பகைவர்களை அன்பராக்கும்.!! உணர்வுகளின் அடிப்படையில் அமைகிறது மனித வாழ்க்கை, பல முடிவுகளும், சில தவறுகளும் கடந்தே பயணிக்கிறது வாழ்க்கை..!! ஆரம்பம் அறிந்த மனிதன், முடிவினை அறிய வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு இந்த நேரம் இப்படி எழுத இயலுமா?! இவ்வுலகில் இருப்பதும் இல்லாததும் இறைவன் விருப்பம்.!! ஆகவே இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம், இருப்பவை பகிர்வோம், வருகின்ற ஆண்டு(2023 ) வளம், நலம் சேர்க்கட்டும்...!! நட்பு தொடருமென நம்பிக்கையில் பயணிப்போம்..!! நன்றி,வணக்கம். ஜெய் ஹிந்த்.  என்றும் அன்புடன், கவிமுரசு பிரவீன்..

'காலா பாணி' மு.ராஜேந்திரன் இ.ஆ.ப

Image
  ' காலா பாணி ' நாவலுக்காக எழுத்தாளர் மு . ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு   2022 க்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது .   ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும் . ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , ராஜஸ்தானி , உருது , சிந்தி , 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் . தாமிர பட்டயம் விருதுடன் ரூ .1,00,000 பணமும் வழங்கப்படும் .   இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது .   . அந்தவகையில் இந்த 2022 ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் மு . ராஜேந்திரன் எழுதிய ' காலா பாணி ' நாவலுக்கு வழங்கப்படுகிறது . கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள்...