இந்தியாவில் 8 நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை
இந்தியாவில் 8 நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் கடந்த 8 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியாவில் கடந்த மார்ச் 25-ந்தேதி பொது ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் இந்தியா மிகப்பெரிய சேதத்தில் இருந்து தப்பியது என உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்தது. அதன்பின் ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரை 2-ம் கட்ட 19 நாள் ஊரடங்கை அமல்படுத்தியது. மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தயாராக இருந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளுக்கு அனுமதி அளித்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் மார்ச...