Posts

சீனாவில் அறிமுகம் கொரோனாவை ஒழிக்க வாய்வழி தடுப்பு மருந்து*

Image
  சீனாவில் அறிமுகம் கொரோனாவை ஒழிக்க வாய்வழி தடுப்பு மருந்து* பீஜிங்: உலகிலேயே முதல் முறையாக சீனாவில் வாய் வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்தது. தற்போது, இதன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப காலமாக பிஎப்-7 என்ற உருமாற்ற கொரோனா வைரஸ் பரவி வருவதால், தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.   இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாய்வழியாக உறிஞ்சக் கூடிய (இன்ஹேலர்) கொரோனா தடுப்பு மருந்து நேற்று அறிமுகம்  செய்யப்பட்டது. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இந்த வாய்வழி தடுப்பு மருந்தை வழங்கப்பட உள்ளது. ஊசி போட விரும்பாதவர்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்தும் போது மூச்சை 5 வினாடிகள் இழுத்து பிடிக்க வேண்டும். இந்த தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதற்கான ஒட்டு மொத்த செயல்முறையும் 20 வி...

அறிந்த தலம் அறியாத தகவல்கள் :பிள்ளையார்பட்டி*

Image
பிள்ளையார் சுழி உண்மை எதைச் செய்தாலும் பிள்ளையாரை வணங்கி விட்டுத் தொடங்குவது மரபு. எழுதும்போது கூடப் பிள்ளையார் சுழி போட்டு விட்டுப் பிறகு எழுதுவதே நமது வழக்கம். இது ஏன்? பிள்ளையார் சுழி போடும் போது, `உ’ என்பது போலப் போடக்கூடாது. `உ’ என்பதில் உள்ள கழுத்து இல்லாதவாறு போட வேண்டும். பிள்ளையார் சுழியில், ஒரு முழு வட்டம், ஒரு அரை வட்டம், ஒரு நேர் கோடு - என மூன்றும் இணைந்திருப்பதைக் காணலாம். உலகில் உள்ள எந்தவொரு மொழியின் எழுத்தாக இருந்தாலும், இந்த முழு வட்டம், அரை வட்டம், நேர்கோடு எனும் இந்த மூன்றும் இல்லாமல் இருக்காது. விநாயகரும் அப்படித்தான். விலங்கு, ஆண், பெண், பூதங்கள் என அனைத்தும் இணைந்த ஒரே வடிவம். இதன் காரணமாகவே, மொழியைத் தெய்வமாகக் கொண்டாடும் நாம், மொழியையும் விநாயகரையும் இணைத்துப் `பிள்ளையார் சுழி’ எனப் போடுகிறோம். ‘‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என வள்ளுவர், தெய்வத்தையும் மொழியையும் இணைத்தே சொல்லி ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். கற்பகத்தின் வறுமை தீர்க்கும் கற்பக விநாயகர் கற்பக விருட்சம், நாம் கேட்டதை எல்லாம் கொடுக்கும். அதுபோல, பிள்ளையார் பட்டியில்...

பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா நினைவு நாளின்று.

Image
  பேச்சாளராக எழுத்தாளராக உரையாசிரியராக பதிப்பாசிரியராக விமர்சகராக வரலாற்று ஆசிரியராக பத்திரிகை ஆசிரியராக சமயாச்சாரியராக திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா நினைவு நாளின்று. தமிழ்ப் பத்திரிகை உலகில் பி.ஸ்ரீ.யின் பங்களிப்பு என்பது "தினமணி"யில் வேலை பார்த்தபோது அவர் வெளியிட்ட பல மலிவு விலைப் பதிப்புகள் என்பதுதான். தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும், புத்தக மதிப்புரைகளும் எனலாம். பி.ஸ்ரீ.யின் பத்திரிகைப் பணியில் முழுப் பரிமாணமும் அவர் "தினமணி"யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்த விகடனில் பகுதிநேர எழுத்தாளராக மாறியபோதுதான் வெளிப்பட்டது. இன்றளவும் பி.ஸ்ரீ.யின் சித்திர இராமாயணத்துக்கு நிகராக ஒரு எளிய படைப்பு வெளிவந்ததில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. பி.ஸ்ரீ.யின் கட்டுரைகள் இல்லாமல் எந்தவொரு தீபாவளி மலரும் வெளிவராது என்கிற நிலைமை கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்தது. ப...

மனநலசிகிச்சை to காதல் திருமணம்

Image
  மனநலசிகிச்சை to காதல் திருமணம் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றது. மகேந்திரன் தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு, திருமண பரிசாக பணி ஆணையை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை

Image
  *சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை!* 💚❤️ நமது வெளிப்புற உறுப்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது போலவே, உள் உறுப்புகளையும் கவனித்துக்கொள்வது அவசியம். நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, ஆஸ்துமா, காச நோய், காச நோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இன்று நம் மூச்சுக்கு ஆதாரமான நுரையீரலை பத்திரமாக வைத்துக் கொள்வதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நுரையீரலை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தீவிர நோய்களில் இருந்து நுரையீரலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம். நுரையீரலை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் 1. சுற்றிலும் பசுமை இருந்தால், நுரையீரலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஆக்ஸிஜனைத் தக்க வைத்துக்கொள்வதில் தாவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இருக்கும் இடத்தை ...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

Image
அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ... அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் . V கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – #கண்ணதாசனை ..! ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் . இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது : "ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.  நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி ,  கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன்.  ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.” அவ்வளவுதான் ..! அடுக்கடுக்காக போன் கால்கள் ..!  யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..! “சப...

பதவியில் இருப்பவர்கள், பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது .

Image
கன்னத்தில் அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம். அப்போது அவருக்கு வயது 11. அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான் ! எதற்காக ? அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் : “எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ; ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார்.  ஊரிலுள்ள ஒருவர்,  ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.  நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது  அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால் வந்த அந்த மனிதரிடம் நான், "அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள். அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான். அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார். பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார். அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி,  பதவியில் இருப்பவர்கள், பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது . அது...