குஜராத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து
குஜராத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து
குஜராத்தில் ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் ரத்தான திருமணங்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தின்போது மக்கள் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், திருமண மண்டபங்கள் போன்றவைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
குஜராத்தில் மாநிலத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில்தான் அதிகமான திருமணங்கள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 30 ஆயிரம் திருமணங்கள் இந்த கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் மிகவும் நெருங்கிய உறவினர்கள் உள்பட 10 பேர் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர் என்று திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ReplyForward |
Comments