காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு


ஜூன் 29, 2020



ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு


தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை - 1 கட்டு


மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கரம் மசாலா


தலா - 1  தேக்கரண்டி
-ஏலக்காய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது


 


 


 


செய்முறை :

புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்.

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக் கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி நன்றாக மசித்துகொள்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கு.

அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விடு.

உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்கு.

விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மசித்த புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து,  பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கு.
ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு தயார்!


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,