கணநாதனே துணை
விநாயகருக்கு ஒரு பாட்டு
பல்லவி
கணநாதனே துணை
நாளும் கணபதியை நினை
தும்பிக்கையனை
துதிப்போர்க்கு வளம்தரும் வாழ்வினை
அருளும்
கணநாதனே துணை நாளும் கணபதியை நினை
சரணம் 1
முன்னிருக்கும் தெய்வமென
ஆலயங்கள் அனைத்திலும்
அமர்ந்திருக்கும்
ஆனைமுகத்தனைப் பாரு
ஆனந்தம் தருவது பிள்ளையாரு
எளிமையில் இருப்பவன்
வலிமையை சேர்ப்பவன்
இடர் நீக்கி காப்பவன்
இன்பத்தை அளிப்பவன்
அகமதில் குளிர்ந்திடும் கணநாதனே துணை
நாளும் கணபதியை நினை
சரணம் 2
அரச மரத்தடியிலும் வீற்றிருப்பான்
அருகம்புல் வைத்தாலும் ஏற்றுக் கொள்வான்
விநாயகர் சதுர்த்தி அன்று
களிமண்ணிலும் கடவுளாய் காட்சி தருவான்
களிப்போடு வீடு வந்து அருள் புரிவான்
முக்கண்ணனின் தலை மகனே
முழுமுதல் கடவுள்என போற்றப்படும் விநாயகனே
நல்லாசியுடன் ஆறுதலையும் அருளும்
கணநாதனே துணை நாளும் கணபதியே நினை
முருக.சண்முகம்,
சென்னை
Comments