நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி


நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி



தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய், கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.


 


       தால் மக்கானி


தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து - 1 கப்


கடலை பருப்பு - கால் கப்
சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)  
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்  
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கு  
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்  
வெண்ணெய் - 5 டீஸ்பூன்  
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

சின்ன  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.
உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு முழுவதும் ஊற வை.
குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடு.
கொதிக்க தொடங்கியதும் பருப்பு, உளுந்தை கொட்டி வேகவைத்து இறக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கு.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கு.
பின் வேகவைத்த பருப்பு, உளுந்தை கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்கு.
அதில் வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.


தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம். கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது.









 

  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,