எம். கே. டி
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் நினைவு தினம்
சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (பிறந்தது மார்ச் 1, 1910 - மறைந்தது நவம்பர் 1, 1959)
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகர் என்ற பெருமையை பெற்றவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார்.
அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. 1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.
ஜனார்த்தனன் மூர்த்தி
Comments