சாதனை நாயகன்

 


7/11/2020


,


இன்று நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்


திரைப்பட நடிகர்,  நடன ஆசிரியர்,  திரைப்பட இயக்குனர்,  பாடகர்,  படத்தயாரிப்பாளர், பேச்சாற்றல் மிகுந்தவர்,  திரைக்கதை ஆசிரியர், டி.வி. ,  தற்போது அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர் பார்த்தசாரதி என்கிற அவர்களைப் பற்றிய பதிவு இன்று.


 


 பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள், 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் நாள், பரமக்குடியில் பிறந்தார்.


 


 தனது ஆறாவது வயதில், குழந்தை நட்சத்திரமாக, பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மா படத்தில் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்களால்,  அறிமுகப்படுத்தப் பட்டார்.


அதன் பின்னர் எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, சிவாஜி கணேசன் நடித்த பார்த்தால் பசி தீரும், அசோகன் நடித்த பாதகாணிக்கை, எஸ்.


 எஸ், ஆர். நடித்த வானம்பாடி ஆகிய படங்களில் நடித்தார்.


 


 இளம் வயதிலேயே இவருக்கு கலை ஆர்வம் அதிகம் இருந்ததால் அவரது தந்தை, சங்கரதாஸ் சுவாமி நாடக சபா நடத்திய டி. கே. சண்முகம் அவர்களின் நாடகக் குழுவில் சேர்த்தார்.


 


 நடனத்தை எம். எஸ். நடராஜன் அவரிடம் பயின்றார்.


 


 நாடகத்துறையில் டி. கே. சண்முகம் அவர்களின் பயிற்சி   இவருக்கு திரைப்படம்  நடிப்பதற்கு   அடித்தளமாக இருந்தது.


 


 பின்னர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களினால்  அரங்கேற்றம் திரைப்படம்  அறிமுகம் செய்யப்பட்டு


 திறமை வளர்த்துக்கொண்டு, 60 ஆண்டு காலமாக நடிப்புத் துறையில் கோலோச்சி வருகிறார்.


 


 இவரைப் பற்றி நிறைய கருத்துக்கள் சொல்லலாம். இருப்பினும்


 பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவரைப்பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சில வரிகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.


 


 களத்தூர் கண்ணம்மாவில் பாலகனாய் வந்த நட்சத்திரம்


 


 கலைத்துறையில் கமலஹாசன் செய்வதெல்லாம் விசித்திரம்


 


 நடிப்பில் முழு கவனம் உணர்வது இவர் பாங்கு


 


துடிப்புடன் புதுமை செய்வதும் இவர் பங்கு


 


 இயக்குனர் சிகரம் வழிகாட்டி வளர்ந்த பிள்ளை


 


இயல்பிலே நடிப்பில்வளம் காட்டி வலம் வந்த பிள்ளை


 


 நாளும் பயிற்சியால் எளிதாக்கியதோ  நடனக்கலை


 


 நாமெல்லாம் பாராட்டவே நடிப்பிலே வைத்ததோ ஆவலை


 


 சிந்தனையில் எப்போதும் திரைப்படமெனும் எண்ணமே


 


 சிரத்தையுடன் சாதிப்பதில் தோன்றுவதோ நவரசமே


 


 சிகைத்தோற்றம் மாற்றியமைத்தாலும் சிங்காரமே


 


நிஜத்தோற்றம்  ஒப்பனைக்குப் பின் திகைப்பைத் தருமே


 


 பாத்திரத்திற்கு ஏற்றபடி   பாவனை செய்வது புதுமை


 


 பாராட்டியே ஆகணும் பார்வையில் இந்நாளிலும் இளமை


 


பல மொழிகள் பேசும் விதம் எல்லாம் அருமை


 


பல துறைகளில் சிறப்பது அக்கலைஞனுக்கும் பெருமை


 


 உலகநாயகன் எனும் பெயர் நிச்சயம் பொருந்தும்


 


உலகமே பாராட்டும் கமல் நடிப்பை வியந்தும்


 


 மெய்யின் வடிவம் தனித்தன்மை அமைத்தும்


 


மேன்மை காட்டுவார் இரவு பகலாக உழைத்தும்


 


சிவாஜிக்கு  அடுத்தபடி நடிப்பிலோரு  இமயம்


 


 சினிமாவில் இவர் போல்  எளிதாய் எவருக்கு  அமையும்


 


 சோதனைகள் எதையும் தாங்கும் வேலை


 


சாதனைகள் நாளும் புரிவதே பத்மஸ்ரீ வேலை


 


 அரசியலுக்கு வரும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஆட்சிக்கு வந்தால்


அவர் விரும்பியபடி நல் ஆட்சியைத் தந்து  நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்வார் என நம்புகிறேன்


 



 முருக. சண்முகம் சென்னை-


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி