சந்திரனில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர்

சந்திரனில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர்!: எதிர்காலத்தில் குடிநீராகவும் பயன்படுத்த வாய்ப்பு..


 


நிலவின் தென் துருவ பகுதியில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை துண்டியுள்ளது. பிரித்தானியாவை தளமாக கொண்ட நேச்சர் வானியல் இணைய இதழ் திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளில், சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன. முந்தைய ஆராய்ச்சிகளில் மேற்பரப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் நீரின் அறிகுறிகளைக் கண்டறியப்பட்டது. ஆனால் இவை நீர் (H2O) மற்றும் ஹைட்ராக்ஸைல் ஆகியவற்றுக்கு இடையில் வேறுபடுத்தி அறிய முடியவில்லை.

அகச்சிவப்பு வானியல் (சோஃபியா) வான்வழி தொலைநோக்கிக்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் ஆய்வகத்தின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சந்திர மேற்பரப்பை முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமான அலைநீளத்தில் ஸ்கேன் செய்தனர். இதிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின்படி நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் எதிர்காலத்தில் குடிநீராகவும், எரிபொருளாகவும் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி