இந்த ஒரே ஒரு மருந்து உங்க மூட்டு வலியை காணாமல் போகச் செய்திடும்
இந்த ஒரே ஒரு மருந்து உங்க மூட்டு வலியை காணாமல் போகச் செய்திடும். !!
உங்கள் மூட்டுகளை திடப்படுத்தி, மூட்டுவலியை காணாமல் போகச் செய்யும் ஒரு மருந்தை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். மூட்டு வலிகளுக்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வைத்தியங்களையும் காணலாம்.
தேவையானவை :
கல் உப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 கப்
தயாரிக்கும் முறை :
தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதில் கல் உப்பைப் போட்டு ஒரு மரக் கரண்டியால் நன்றாக கலக்குங்கள். உப்பும் எண்ணெயும் நன்றாக சேர வேண்டும். பின்னர் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இறுக்கமாக மூடி வைத்திடுங்கள். 8 நாட்களுக்கு அதிகம் வெளிச்சமில்லாத இடத்தில் வைத்திடுங்கள்.
பயன்படுத்தும் முறை :
இந்த எண்ணெயை 8 நாட்களுக்கு பின் தேவையான அளவு எடுத்து லேசாக சூடு பண்ணி, மூட்டுப் பகுதியில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் தர வேண்டும்.
நன்மைகள் :
இந்த எண்ணெய் மூட்டைச் சுற்றியிருக்கும் தசை மற்றும் இணைப்புகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மூட்டில் இருக்கும் இறுக்கத்தை குறைகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. ஓரிரு நாட்களில் மூட்டு வலி குறைந்துவிடும்.
மூட்டு பலமாக இருக்க குடிக்க வேண்டிய பானம் :
தேவையானவை :
வேக வைத்த ஓட்ஸ்- 1கப்
நீர்- 1கப்
அன்னாசி சாறு - 1 கப்
ஆரஞ்சு சாறு - 1 கப்
தேன்- 2 ஸ்பூன்
பட்டைப் பொடி - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
மேற்கூறிய எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மூன்று சம அளவாக பிரித்து காலை, மதியம், இரவு என குடித்தால் உங்கள் மூட்டு பலம் பெறும். பிற்காலத்தில் மூட்டு வலி வராது.
ஆர்த்ரைடிஸ் வராமல் தடுக்கும் பானம்
வயதான பின் எலும்புகளின் பலவீனத்தால் ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்கு வாதம் உருவாகிறது. இதனை தடுக்க இந்த ஜூஸை வாரம் இருமுறை குடியுங்கள்.
தேவையானவை :
குப்பை மேனி இலைகள் - ஒரு கைப்பிடி
நீர்- 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 மூடி
தேன் - 8 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
ஒரு லிட்டர் நீரில் குப்பை மேனி இலைகளை பொடியாக நறுக்கி போடுங்கள். இதனை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பாக ஆறிய பின் வடிகட்டி அந்த நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.
நன்மைகள் :
மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது. மூட்டு இணைப்புகளில் இருக்கும் பாதிப்புகளை குணப்படுத்துகிறது. தேன் மற்றும் எலுமிச்சை சாறு நச்சுக்களை அகற்றும். மூட்டுகளில் படியும் படிகாரங்களை எலுமிச்சை கரைக்கிறது. இதனால் மூட்டுகளில் இருக்கும் இறுக்கம் குறையும்.
மூட்டை பலப்படுத்தும் மசாஜ் :
தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு.
தயாரிக்கும் முறை :
ஆலிவ் எண்ணெயை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி அதில் 1 ஸ்பூன் அளவு அல்லது 3ல் ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து கொள்ளுங்கள். ஒரு பஞ்சினால் சூடான எண்ணெயை நனைத்து மூட்டுகளில் தடவுங்கள். தினமும் இரவு செய்து கொண்டு படுத்தால் மூட்டு வலி குறைவதை காண்பீர்கள்.
நன்மைகள் :
ஆப்பிள் சைடர் வினிகர்மூட்டுகளில் தங்கியிருக்கும் நச்சுத்தன்மையை அகற்றுகிறது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு பலம் தருகிறது. இவையிரண்டும் வேகமாக மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Comments