புத்தொளி வீசும் புத்தாண்டே

 புத்தொளி வீசும் புத்தாண்டே 🌹🌹



    வருடத்திற்கோர் முறை பிறக்கும் இக்கைகுழந்தையின் கை பிடித்தே நாம் நம் வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்றோம்.  வருடங்கள் மாறலாம், நம் வாழ்க்கையில் உறவுகள்,நட்புகள்,என பல மாற்றங்கள் மாற்றங்கள் வரலாம், மாற்றம் ஒன்றே நம் அனைவரின் வாழ்விலும் மாறாதது . இது வரை நாம் எப்படி இருந்தோம் என்பதை விட இனி நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதே நம் ஒவ்வொருவரின் சிந்தனையாக இருக்கும் புத்தாண்டில்.

         இதுவரையில் நாம் பிறரை காயப்படுத்தி இருந்தாலோ,தூன்புறுத்தி இருந்தாலோ,மனம் நோகும் படி பேசி இருந்தாலோ,  அதற்காக மனம் வருந்தி,இனி வரும் நாட்களிள் இது போன்ற தவறை நாம் எப்போதும் செய்ய கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 

     எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்தவரை சந்தோஷத்தை மட்டுமே நாம் கொடுக்க வேண்டும். 


      நாம் எப்போதும் பிறர் இதழ்களில் புன்னகையாகவே இருக்க வேண்டும். விழிகளிள் நீராக அல்ல!

      இனி வரும் நாட்களில் எல்லாம்  எப்போதும் நாமும்  நம்மைச் சுற்றி இருப்பவர்களும் என்றும் நலமுடன் வாழ வழி வகுத்து புது வருடத்தைக் கொண்டு செல்வோம்.

01.01.2021

     


    நித்யஶ்ரீ 🌹

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி