சுப்புடு நினைவு நாள்

 சுப்புடு நினைவு நாள் இன்று மார்ச் 29
சுப்புடு சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்!
தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில்அதைக்காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது,
அதற்கு காரணம் சுப்புடு!
பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..!
பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு!
மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்!
அதற்குமுன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும்முன்பு நன்றாக பயிற்சி எடுத்துவரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!
ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)
இளையாராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"
தேவாவுக்கு,இளையராஜா பரவாயில்லன்னு சொன்னவரொட அடுத்த அட்டாக் ரகுமான் காதலன் படத்து உன்னிகிருஷணன் பாடல்! (படத்துலயே அந்த பாட்டுத்தான் சூப்பர்ன்னு எல்லாரும் சொல்வாங்க!)
கடைசியாக அவர் சொன்ன கமெண்ட் "இவங்க ரெண்டு பேருக்கு,தேவாவே பெஸ்ட்ன்னு..!
ஒரு பரதநாட்டியக்கலைஞரை பற்றி சுப்புடு குறிப்பிட்டது"சுற்றளவை குறைத்தால் உலகம் சுற்றலாம்ன்னா" பாருங்களேன் ஆளுக்கு எவ்ளோ குசும்புன்னு!
ஆயில்யன்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,