வெறும் ரூ.3899-க்கு இப்படி ஒரு 4G Phone

 

வெறும் ரூ.3899-க்கு இப்படி ஒரு 4G Phone-ஆ! ஆளுக்கு 2 வாங்கலாம் 

ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவின் மிகவும் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் ஏ 23 ப்ரோ மாடல் வெறும் ரூ.3899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவின் மிகவும் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் ஏ 23 ப்ரோ மாடல் வெறும் ரூ.3899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான கிரேடியன்ட் டோன் பேக் கலர் பூச்சு மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் - சபையர் ப்ளூ மற்றும் லேக் ப்ளூ - வாங்க கிடைக்கிறது.

ரூ.9999-க்கு இப்படி ஒரு Phone-ஆ! இனி Poco M3, Realme C25, Samsung M12 எதுக்கு?

இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 1 முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மைஜியோ ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ்டிஜிட்டல்.இன் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகளின் வழியாக வாங் கிடைக்கும்.

சுவாரசியமாக ஜியோ நிறுவனம், ஐடெல் ஏ 23 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ,3,000 மதிப்புள்ள சலுகைகளையும் வழங்குகிறது.

ரூ.249 மற்றும் அதற்கு மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள வவுச்சர்கள் அணுக கிடைக்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்கு பொருந்தும்.

"பீச்சர் போன்களிலிருந்து மேம்பட விரும்பும் நுகர்வோருக்கான முதல் டச் ஸ்க்ரீன் சாதனமாக ஐடெல் ஏ 23 ப்ரோ இருக்கும்" என்று ஐடெல் நிறுவனம் கூறுகிறது.
ஐடெல் ஏ 23 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

ஐடெல் ஏ 23 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5.0 இன்ச் ப்ரைட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 480 x 854 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூனை கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 10.0 (கோ பதிப்பு) மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் உடனாக 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரோம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.

பேட்டரியை பொறுத்தவரை, ஐடெல் A23 Pro ஸ்மார்ட்போன் ஆனது 2400 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 2 எம்பி பின்புற கேமராவையும் முன்பக்கத்தில் விஜிஏ செல்பீ கேமராவுடன் வருகிறது. இது ஒரு சாப்ட் ஃபிளாஷையும் கொண்டுள்ளது.

ஐடெல் ஏ 23 ப்ரோ 2 சிம் ஸ்லாட்டுகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை கொண்டுள்ளது, இது பயனர்களின் போன்களை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,