1 லட்சம் பேரை பணியமர்த்தலாம்.. வரலாறு காணாத உயரத்தை எட்டும் டிசிஎஸ்.

 

1 லட்சம் பேரை பணியமர்த்தலாம்.. வரலாறு காணாத உயரத்தை எட்டும் டிசிஎஸ்.


ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரு நிதியாண்டில் இந்தளவுக்கு பணியமர்த்தல் செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே அதிகமாகும்.

முன்னதாக இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 55,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்தது


குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த இலக்கினையும் தாண்டி இதுவரையில், 77,000 பேரை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டினை காட்டிலும் அதிகமாகும். கடந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 34,000 பேரை பணியமர்த்தியுள்ளது. 4வது காலாண்டிற்கான இலக்கு என்பது இல்லை என்றாலும், தொடர்ந்து பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக நடப்பு நிதியாண்டில் இலக்கினை தாண்டியும் இந்த பணியமர்த்தல் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
.டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 2 லட்சம் பணியாளர்களுடன் புதிய மைல்கல்லை எட்டியது. இந்த நிலையில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்திய ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் பணியமர்த்தல் அதிகரிக்கும்போது இன்னும் மிகப்பெரிய நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுக்கும்.இன்ஃபோசிஸ்-ன் மெகா திட்டம் இதே நாட்டின் மற்றோரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நடப்பு ஆண்டில் 55,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து தேவை வலுவாக இருந்து வரும் நிலையில், இந்த பணியமர்த்தல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஐடி நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது ஐடி துறையில் விலைபோரினை போல, திறமைக்கான ஒரு போரினை உருவாக்கியுள்ளது எனலாம்.விப்ரோவின் திட்டம் இதேபோல விப்ரோ நிறுவனமும் அடுத்த நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் புதியதாக பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,500 ஆக இருக்கும். இது நடப்பு நிதியாண்டில் மொத்த பணியமர்த்தலில், 70% பேருக்கும் அதிகமாக கேம்பஸ் இண்டர்வியூ மூலமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. நல்ல எதிர்காலம் உண்டு பரவி வரும் பெரும் தொற்றுக்கு மத்தியில் ஐடி துறையில் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதமும் பல முன்னணி நிறுவனங்களில் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பணியமர்த்தலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இதற்கிடையில் ஐடி பிரெஷ்ஷர்களுக்கும், ஐடி திறனுள்ள ஊழியர்களுக்கும் தொடர்ந்து நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி