வி. குமார் நினைவுநாள்
வி. குமார் நினைவுநாள் இன்று
”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் (சூலை 28, 1934 - சனவரி 7, 1996) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். காதோடுதான் நான் பேசுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், கண்ணொரு பக்கம், இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள், சிவப்புகல்லு மூக்குத்தி, வா வாத்யாரே வூட்டாண்ட, நீ போட்ட மூகுத்தியோ, நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை , போன்றப் பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்களாகும்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments