எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

 


அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திப்பதைத் தவிர்த்தார். அமெரிக்காவிலிருந்து அவர் திரும்பியதும், அவரிடம் இங்கு நிகழ்ந்தது அனைத்தையும் சொல்லி, தனக்கு ஏற்பட்ட அநீதியை விவரித்து முறையிடலாம் என்று நினைத்திருந்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர் தன்னை தவிர்ப்பது விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் எப்போதும் தன் அனுமதி இல்லாமல் கட்சிக்காரர்கள், பத்திரிகையாளர்களை சந்திப்பதை விரும்பியதில்லை. ஊடகங்களை அவரே கையாண்டார். ஆனால், ஜெயலலிதா இந்த விதியை மீறினார். பத்திரிகையாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “நான் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது. பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து இருந்தால் பரவாயில்லை… குழப்பங்களை விதைத்து இருக்கிறார். அது மட்டுமா? தன் மனைவி ஜானகியைப் பற்றியும் தவறாகப் பேசி இருக்கிறார்… இனி, ஜெயலலிதாவை தொலைவிலேயே வைக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.
ஜெயலலிதா டெல்லியில் கொடுத்த பேட்டியில், ஜானகி – எம்.ஜி.ஆர் திருமண பந்தம் குறித்தும் சில வார்த்தைகளை பேசி இருந்தார். இதுதான் எம்.ஜி.ஆரை, மிகவும் கோபப்படுத்தியது. எதை மறந்தாலும், மன்னித்தாலும்… ஜானகியை தவறாகப் பேசியதை மன்னிக்க அவர் தயாராக இல்லை.
ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஓரம்கட்டியதைப் பார்த்து, கட்சியின் முன்னணி தலைவர்கள் அகம் மகிழ்ந்துதான் போனார்கள். இனி எப்போதும், ஜெயலலிதா – எம்.ஜி. ஆர் சந்திப்பு நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டார்கள். ஆம், அவர்களுக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது, மீண்டும் இருவரும் சந்தித்தால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மனதை கரைத்து விடுவார் என்று… இறுதியில் அதுதான் நிகழ்ந்தது.
நன்றி: வணக்கம்லண்டன்.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி