Thursday, April 14, 2022

Happy Equality Day❤️❤️❤️❤️💐💐💐

 Happy Equality Day❤️❤️❤️❤️💐💐💐



புரட்சியாளர் அம்பேத்கர் ஓர் சகாப்தம்!


பிறப்பு: 14. ஏப்ரல் 1891


இந்திய விடுதலைக்கு பிறகு நாட்டின் முதல் சட்ட அமைச்சர்.


உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.


பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் பாடுபட்டவர்.


"திராவிட புத்தம்"  என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் என அழைக்கப்பட்ட தலித் மக்களை புத்த மதத்தை தழுவ செய்தவர்.


பாரத ரத்னா-1990 அண்ணல் மறைவிற்கு பிறகு வழங்கப்பட்டது.


புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ் என்ற நூலை 1956 இல் வெளியிட்டார்.


வயது அடிப்படையில் வாக்குரிமை கொண்டுவர காரணமானவர்.


பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என முழங்கியவர்.


நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என போராடியவர்.


கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி பதவியை ராஜினாமா

 செய்தவர்.


தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை கொண்டுவந்தவர்.


பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வர காரணமானவர்.


இந்திய ரிசர்வ் வங்கி உருவாக அடிகோலியவர்.


தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட அமைக்க வழிகோலியவர்.


உலகில் எப்போதெல்லாம் பொருளாதார பெருமந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பொருளாதார வல்லுனர்களுக்கு உதவியாக இருப்பது அண்ணல் எழுதிய நூலான "ரூபாயின் சிக்கல்"என்ற நூலை படித்தே தீர்வுகாண்கிறார்கள்.


“முதலில் தயவு செய்து எனது உயிரை குறித்து கவலை கொள்ளாதீர்கள்… நான் தேர்ந்தெடுத்த பாதையில் அபாயங்கள் இருப்பதில் சந்தேகம் இல்லை… அவற்றை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்… அபாயங்கள் இல்லாத மலர்ப்பாதைகள் என்று எதுவும் இல்லை… ஆபத்துகளை தவிர்க்க வேண்டுமென்றால் நான் வெறுமனே அமைதியாக எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்… அது என்னால் இயலாது…”

பிப்ரவரி 27, 1928புரட்சியாளர் பேசியது.


தனக்கு மேலிருந்து ஒரு சாதி தன்னை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை விட, தான் அடிமைப்படுத்த தனக்கு கீழ் ஒரு சாதி இருக்கிறது என்பதே சாதி தரும் வக்ரமான போதை. 


சாதி - தொன்றுதொட்டு வரும் ஒரு பண்பாடற்ற காட்டுமி்ராண்டி மனநிலை. அதிலிருந்து வெளியேறாவிட்டால் எத்தனை விடியல்கள் உதித்தாலும் பயனில்லை.  


அண்ணலை கைகொள்வோம். 

ஜெய் பீம் ❤️

=அனந்தகிருஷ்ணன்

No comments:

Featured Post

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம்

  பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம் மனிதர்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசி...