கமல் நெக்ஸ்ட்நடிக்க போற படங்கள்
கமல் நெக்ஸ்ட்நடிக்க போற படங்கள், அவர் கமிட் செய்திருக்கும் படங்கள் ஆகியவற்றின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். ஒரே சமயத்தில் இத்தனை படங்களிலா நடிக்கிறார் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். 


இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, கமல் அடுத்ததாக ஆண்டவர் 233 படத்தில் நடிக்க போகிறாராம். இதை முடித்த பிறகு தான் மகேஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறாராம். 


இதைத் தொடர்ந்து ஆண்டவர் 234, கமல் - இளையராஜா- பா.ரஞ்சித் இணையும் படம், ஆண்டவர் 235 (இந்தியன் 2) , கமல் - அனிருத்-ஷங்கர் படம், ஆண்டவர் 236, கமல் - ஜிவி பிரகாஷ் - வெற்றிமாறன் இணையும் படம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதற்கு இடையில் விக்ரம் 3, கைதி 2 படங்களிலும் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த தகவலின் படி பார்த்தால், கமலிடம் தற்போது கைவசம் 10 படங்கள் உள்ளது. இந்த லிஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் ஆச்சரிமாக, இவர் என்ன நான்கு வருடங்கள் நடிக்காததற்கும் சேர்த்து நடிக்கிறாரா? விக்ரம் ஹிட், வசூலுலை பார்த்தே அனைவரும் ஆடி போய் இருக்காங்க. இதுல இத்தனை படத்தையும் நடித்து வரிசையாக கமல் வெளியிட்டால் இருக்க மற்ற நடிகர்கள் அத்தனை பேரும் ஃபீல்டு அவுட் தான் போல என கமெண்ட் செஞ்சு வாராய்ங்க


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,