20 கோடி வரை சம்பளம்...ஆனால் ஒரு நாள் கூட்டத்தை கூட கூட்ட துப்பிள்ளை.
20 கோடி வரை சம்பளம்...ஆனால் ஒரு நாள் கூட்டத்தை கூட கூட்ட துப்பிள்ளை
..நடிகர்களை வாரிய சுந்தர் சி
இந்த ஹீரோக்கள் பண்ற அட்டூழியம் இருக்கே அதிலும் சிலரால் ஒருநாள் கூட்டம் கூட கூட்ட முடிவதில்லை. அத்தனை கோடி கொட்டிக் கொடுப்பதை விட நம்மளே நடித்தி விடலாம் என்று தான் நாயகனானேன் என் கூறியுள்ளார்
சமீபகலமாக பிரபல நடிகர்கள் குறித்த புகார்களை தயாரிப்பாளர்கள் கடுமையாக வைத்து வருகின்றனர். தயாரிப்பாளரான ராஜன் அவர்கள் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் குறித்த எந்த கவலையும் கொள்வதில்லை என மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இதே போன்ற கருத்துக்களை பிரபல இயக்குனர் சுந்தர் சி கூறியிருப்பது. தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மணிவண்ணனிடம் துணை இயக்குனராக சினிமா உலகம் பற்றி கற்றுக் கொண்ட சுந்தர் சி அவர் பாணியிலியே நகைச்சுவை கலந்த படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். முறை மாமன், அருணாச்சலம், அன்பே சிவம், மேட்டுக்குடி, முறை மாப்பிள்ளை, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் காமெடி சென்ஸ் காரணமாகவே இந்த படங்கள் ஓடின. அதிலும் உலகநாயகன், ரஜினி ஆகியோரை நகைச்சுவை நாயகர்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் இவர் இயக்கத்தில் நடிக்க விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நடிப்பிலும் கவனம் செலுத்திய இவர் தலைநகரம் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், ஐஸ்வர்யா தத்தா, விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த சுந்தர் சியிடம், நீங்கள் ஏன் நடிகராக விரும்பினீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த இயக்குனர், படத்தில் நடிப்பதற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் கேட்பார்கள். அவ்வளவு சம்பளம் கொடுத்தால். படத்திற்கு தேவையான ஓபனிங் கொடுக்க வேண்டும். ஒரு நான்கு நாட்களாவது திரைப்படம் ஹவுஸ் புல்லாக வேண்டும். அதற்குப் பிறகு படத்தின் திரைக்கதையை அதை பார்த்துக் கொள்ளும். இந்த ஹீரோக்கள் பண்ற அட்டூழியம் இருக்கே அதிலும் சிலரால் ஒருநாள் கூட்டம் கூட கூட்ட முடிவதில்லை. அத்தனை கோடி கொட்டிக் கொடுப்பதை விட நம்மளே நடித்தி விடலாம் என்று தான் நாயகனானேன் என் கூறியுள்ளார்.
மேலும் பேசிய சுந்தர்சி, தலைநகரம் படத்தில் நடிப்பதற்காக ஆஸ்கார் ரவிச்சந்திரன் பல ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் எந்த ஹீரோவும் முடிவாகவில்லை. பின்னர் அவரிடம் சென்று நீங்கள் இவ்வாறு அனைத்து நடிகர்களை புறக்கணித்தால் நான் தான் ஹீரோவாக வேண்டும் என கூறினேன் உடனடியாக ஓகே சொன்ன தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நீங்களே நாயகனாக நடிங்க நான் தயாரிக்கிறேன் என்று கூறினார். அதன் மூலம் தான் நான் நாயகன் ஆனேன் என கூறியுள்ளார்.
நன்றி
https://tamil.asianetnews.com/
Comments