சர்தார் வேதரத்தினம் பிள்ளை நினைவு நாளின்று

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஒவ்வொரு மாகாணங்களில் இருந்தும் பல தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பல தலைவர்களின் செயல்பாடுகள் கவனத்துக்குரியவை. அந்தவகையில் முக்கியமான தலைவர் வேதரத்தினம் பிள்ளை.
இந்திய விடுதலை இயக்கத்திலும் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக 14 ஆண்டுகள் பதவிவகித்துள்ளார். ஆங்கிலேய அரசின் உத்தரவை மீறி 1930 -ல் ராஜாஜியின் தலைமையில் நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார். இவரது நினைவாக 1998 பிப்ரவரி 25-ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
மிகுந்த ஆசார சீலரும், ஆன்மீகருமான இவரிடம் தேசியம் ஊற்றெடுத்துப் பெருகியது. சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனம் தான். வேதரத்தினம் பிள்ளை தன் கைவிரலை அசைத்தாலே, வேதாரண்யம் துள்ளி எழுந்து நிற்கும், நாட்டு மக்களுக்கு அவரிடம் அத்தனை மரியாதை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,