ஹாலிவுட் பேரழகி மர்லின் மன்றோவின் நினைவு நாள்
ஹாலிவுட் பேரழகி மர்லின் மன்றோவின் நினைவு நாள் இன்று🥲
ஆயிரம் நடிகைகள் வந்தாலும், அவரை போல் இனி ஒருவர் இல்லையே, என தலைமுறைகள் கடந்தும் ஏங்க வைத்த நடிகை தான் மர்லின் மன்றோ.. 1950-களில் ஹாலிவுட் திரைப்படங்களில் நாயகியாக தோன்றிய மர்லின் மன்றோ, இன்றளவும் உலக திரை ரசிகர்களின் மனதில், நங்கூரம் பாய்ச்சி அமர்ந்திருக்கிறார். இவரின் பெயரை கேட்டதுமே, காற்றில் அலையடிக்கும் கவுன் அணிந்த அவருடைய, கருப்பு வெள்ளை புகைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சினிமா ரசிகர்களின், கனவுகளில் உலா வந்த எழில் தேவதை மர்லின் மன்றோ.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில், 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி, பிறந்த மர்லின் மன்றோவின் இயற்பெயர் நோர்மா ஜீன் என்பதாகும். மர்லின் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்துவிட, அவரின் தாய்க்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இளம் வயதில் காப்பகத்தை விட்டு வெளியேறி பணிப்பெண்ணாக பல இடங்களில் பணியாற்றினார். 16 வயதில் கப்பல் படை வீரர் ஜிம்மி டாகர்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றாலும், அதுவும் மூன்றாண்டுகள் மட்டுமே நீடித்தது.
1944-ம் ஆண்டுவாக்கில் தொழிற்சாலை ஒன்றில், பணியாற்றிக் கொண்டிருந்த மன்றோவை ஒளிப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுக்க, அந்தப்படம் இவரது வாழ்க்கையையே மாற்றியது. அழகும், வனப்பும், இவரை மாடலிங் துறைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, அப்படியே சினிமா ஆசையில் நடிப்பு பயிற்சிக்கும் சென்றார் மர்லின் மன்றோ. சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்த சினிமா வாய்ப்பு, ஒரு சில ஆண்டுகளிலேயே நகைச்சுவை நாயகியாக கொடிக்கட்டி பறக்க வைத்தது. குறுகிய காலத்திலேயே ஹாலிவுட் திரையுலகத்தை ஈர்த்த மன்றோ, 20-ம் நூற்றாண்டின் இறுதியில் ஹாலிவுட்டின் உச்ச நடிகையாக கோலோச்சினார்.
‘The Asphalt Jungle’ மற்றும் ‘All About Eve’ ஆகிய படங்கள் மர்லின் மன்றோவை, உலக ரசிகர்களிடம் கொண்டுச் சேர்த்தன. இவரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர்கள் குறைவுதான். The Seven year Itch என்ற படத்திற்காக, எடுக்கப்பட்ட புகைப்படம் தான், காற்றில் பறக்கும் ஆடையில் தோன்றும் மர்லின் மன்றோவின் புகைப்படம். இந்த படம் எடுத்து 60 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றளவும் இது போன்ற மாதிரியை, யாராலும் எடுக்க முடியவில்லை.
மூன்று திருமணங்கள் செய்துகொண்ட மர்லின் மன்றோ, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி மற்றும் ராபர்ட் கென்னடியுடனும் இணைத்துப் பேசப்பட்டார்.
புகழின் வெளிச்சத்தில் மர்லின் மன்றோ, இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருந்தது. ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்த மர்லின் மன்றோ, தனது இறுதி நாட்களில் போதைப்பொருளுக்கு அடிமையாகி, தன்னுடைய 36 வயதில் இதே நாளில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டார் என பேசப்பட்டாலும், பிரபஞ்சத்தின் பேரழகியாக கொண்டாடப்பட்ட மர்லின் மன்றோவின் மரணம், இன்றளவும் புதிராகவே உள்ளது.

f rom The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,