கருப்புகவுணி அரிசி

 


கருப்பு கவுணி அரிசியின் வரலாறு:

கருப்புகவுணி அரிசி பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். 

கருப்புகவுணி அரிசி நிறம்:

கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான்.

ஊதா அரிசியா கருப்பு அரிசியா?

கருப்பு கவுணி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். கருப்பு கவுணி அரிசியின் கருப்பு நிறத்தின் காரணம் இதில் அதிகப்பிடியான “Anthocyanins” என்ற மூலக்கூறு தான்.

கருப்புகவுணி தமிழகம் வந்த எப்படி:

பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.

கருப்புகவுணியும்-அரசரின் விருந்தும்:

சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட அரிசி

பொது மக்கள் கருப்பு கவுணி பயன்படுத்த தடை செய்யப்பட்டது. வரலாற்றில் கருப்பு கவுணி அரிசியை “Forbidden Rice” என்று அழைக்க காரணமாகும். சீனாவின் அரசர்கள், அரச குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட அரிசியாக  “கருப்புகவுணி” கருதப்பட்டது. இதன் காரணம் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள். சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொது மக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்ய பட்டது.

 இப்போ உங்களுக்குத் தேவையெனில் கிடைக்கும்.

கருப்புகவுணி அரிசியின் பலன்கள்:

இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து(Fiber) அவசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1 .கருப்புகவுணி அரிசியின் Antioxidants பலன்கள்:

கருப்புகவுணி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும்,  புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.

சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின் Antioxidants – Free Radical Damage பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது. 

2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது:

கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை  Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில்  கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து.

3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation: 

கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக்(inflammation) என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edemaவைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases) தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது.

4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க:

பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த carbohydrate உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில்,  நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.

இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுணி மற்றும் unpolished brown ரைஸ் பயன்படுத்த வேண்டும் என்பதே.

  5. கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது:

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது:

கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது

கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease) என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது.  இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், triglyceride மற்றும் total cholesterol அளவைக் குறைத்து, இதனால் Fatty liver diseaseக்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.

7. மன அழுத்தம்: 

மன அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவும்.

8.  இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி:

கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.

9. சர்க்கரை குறைபாடு:

ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க டயாபடீஸ் என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசி உள்ள Antioxidants, நார்சத்து, அந்தோசினனின், போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,