ஆஹா வாழைக்காய்!

 ஆஹா வாழைக்காய்!



வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவேதான் வாழைமரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்குப் போதிய வலிமை தந்து, மூட்டுவலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கிறது.


வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை அதிகமாக உள்ளனது. இந்த ஸ்டார்சானது கரையாத நார்ச்சத்தாக செயல்பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தைச் சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.


வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும். வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்கிறது. வாழைக்காய் ரத்த செல்கள் குளுக்கோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

 - பொ. பாலாஜிகணேஷ்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,