ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!*

 *ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!*




உலகம் வேகமாக எந்த அளவிற்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறதோ அதேபோல உணவிலும் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலகட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்திற்கும் தற்போது இருக்கும் உணவு பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. முந்தைய காலத்தினர் உழைத்துவிட்டு அதனின் பசியை போக்கவே உண்டு வந்தனர். இப்பொழுதே காலகட்டத்தினர் ருசிக்காகவே உணவை தேடி செல்கின்றன. அவ்வாறான உணவுகள் பலவகை உயிருக்கும் ஆபத்தானவை. அவற்றை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.


*டொரிடோஸ்:*


இது ஒரு பிரபலமான சிப்ஸ் வகையாகும். இதனை தயாரிக்க மக்காச்சோளத்தை பயன்படுத்துகின்றனர். இதில் அதிக அளவு பிரசர்வேட்டிவ் சேர்ப்பதுடன், பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பல ரசாயனங்களையும் சேர்க்கின்றனர். அது மூலையில் உள்ள நரம்பை தூண்டி மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கிறது. இவ்வாறு செய்வதால் இது ஸ்லோப் பாய்சனாகவே உடம்பில் செயல்படுகிறது.


*இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்:*


தற்பொழுது தமிழ்நாட்டில் கூட இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவது அதிகரித்து விட்டது. சுடுதண்ணீர் ஊற்றினால் போதும் உடனடியாகவே நூடுல்ஸ் ரெடியாகிவிடும். இதனை குழந்தைகள் கூட சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது உடம்பில் பாய்சனாக செயல்படும் என்பது யாரும் அறியாத ஒன்று. குறிப்பாக இவ்வாறான நூல்களில் சோடியம் புளுடனேட் போன்றவை கலக்கின்றனர்.




*ஃப்ரூட் ஜுஸ்:*


ஃப்ரூட் ஜூஸ் 25% ரசாயன பொருட்களாலையே தயாரிக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.



*கோக் மற்றும் பெப்ஸி:*


கோப் மற்றும் பெப்சி குடிப்பதை ஸ்டைல் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இதில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. குறிப்பாக இதைத் தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகிறது.


*எண்ணெய்யில் பொரித்த உணவுகள்:*


அனைவரின் உடலுக்கும் குறிப்பிட்ட அளவு கொழுப்பு சத்து தேவைதான். ஆனால் அதனை எந்த அளவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். தினம்தோறும் அதிக அளவில் கொழுப்பு சத்துப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனை விரைவிலேயே உங்களை நெருங்கிவிடும்.


*பிஸ்கட்:*


பலருக்கும் காலை நேரத்தில் டி அல்லது காபியுடன் பிஸ்கட் இருப்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதுவும் நமது உடலில் ஸ்லோ பாய்சனாக செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் உடல் உபாதைகள் அதிகரிக்க பிஸ்கட் தான் காரணம் எனக் கூறியுள்ளனர். இது பேக்கிங் முறையில் தயாரிக்கப்பட்டாலும், மூளையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்கிறது என்று தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில் அடுத்தடுத்தாக உள்ள *, பீனட் பட்டர், டோனட், பர்கர்* இவைகளும் அவ்வாறுதான். குறிப்பாக டோனட்டில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது. இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் கட்டாயம் இருதயம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்படும். தற்பொழுது உள்ள துரித உணவுகளை தவிர்த்தாலே நமது உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி