சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

 சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது





 எந்நாளும் தனது சொல்லாற்றலால்  சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆற்றலை  கவிதை வழி தந்தவரும், விவேகத்துடன் வேகம் கலந்து, அன்றும்,  இன்றும்,  என்றும் நம் தமிழ்த்திருநாட்டில் தனக்கென, தனி அடையாளத்தைக் கொண்டு புகழுடன், நம்மோடு வாழ்ந்து வருபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்.


  இன்று அவரை நினைவில் கொள்வோம். தேசத்துக்காக,  தன் கவிதை வரிகளால், மக்களை விழிப்படையச் செய்த முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் அவர்கள்.


 எட்டயபுரத்தில்  11.12.1882 ல்  பிறந்த அறிவுச் சுடர், சமஸ்கிருதம், இந்தி. வங்காளம்,  ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளை  கற்றுத் தெளிந்தார்.


 தமிழ்மொழியின், இலக்கண இலக்கியங்களை, முறைப்படி பயின்றதன் காரணமாக, 

1904 ஆம் ஆண்டு, சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியர் ஆனார்.  பின்னர் அரசியலில் தீவிரம் கொண்டபோது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. யுடன் தொடர்பு ஏற்பட்டது, 


 கல்கத்தாவில் நடைபெற்ற, காங்கிரஸ் சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ளச்  சென்றபோது  சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவை சந்தித்து அவரையே தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.1907 ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டிலும்

 திலகர், லாலா லஜபதி ராய், மற்றும் அரவிந்தர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.


 வீர சுவைமிகுந்த பாடல்களை, இந்திய இதழில்  வெளியிட்டு, மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினார். ஆங்கில அரசினால் கைது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. நண்பரின் வேண்டு கோளுக்கிணங்க புதுவை சென்றார். கவிதைத் தொழில் செழித்து ஓங்கியது.


 பாரதியாரின் கவிதைகள், நாட்டுப்பற்று கொண்டதாகவும், சமுதாய மக்களின் விடுதலை வேட்கை சிந்தனையைத் தூண்டுவதாக மட்டுமல்லாமல், பல்வேறு ரசனையுள்ள இலக்கிய கவிதைகளையும்,  இயற்றினார். 


 இதோ இவரின் தேசபக்தி பாடல்கள்:


 வந்தே மாதரம் என்போம் -- நம் மாநிலத் தாயை வணங்குது மென்போம்



 பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு



 தாயின் மணிக்கொடி பாரீர்-- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்


 பாரத சமுதாயம் வாழ்கவே -- வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே


 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? 

 என்று மடியும் எங்கள் அடிமையில்  மோகம்? 


 என வீரத்தால், பாடியது மட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாடி


 ஆடுவோமே -- பள்ளு பாடுவோமே: ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே என வருங்கால சுதந்திர வேட்கையை, தன் நிகழ்கால வாழ்வில்

 நெஞ்சம் நிமிர்த்தி பாடியவரரே, நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்.


 அவர் தமிழ் இலக்கிய நூல்களை நன்கு கற்றதால். 


 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றும்


 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

 என்று பாடியதன்  மூலமாக, தமிழ் மொழியின் தொன்மை பெருமைப் படுத்துவது மட்டுமல்லாமல், அக்காலப் புலவர் களையும் தனது கவியால் பெருமைப் படுத்தி உள்ளார்.


 பாரதியாரின், பாஞ்சாலி சபதம். கண்ணன் பாட்டு குயில் பாட்டு, தெய்வப் பாடல்கள். வேதாந்தப் பாடல்கள்,, தேசிய இயக்கப் பாடல்கள் போன்றவைகள் பாடியே

 தமிழ் மக்களின் அன்பையும், அவர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து. இன்றும் வாழ்ந்து வருகிறார் தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்.



இந்நாளில், சுப்பிரமணிய பாரதியாரை  புகழ்வது மட்டுமல்லாமல், இந்திய தேச விடுதலைக்காக பாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களையும்

 எண்ணிப் பார்ப்போம். 


 வந்தே மாதரம்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி