Posts

சர்வதேச அனிமேஷன் தினம்

Image
சர்வதேச அனிமேஷன் தினம்   சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்" கொண்டாடப்படு கிறது.1892ல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியு சியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.யுனெஸ்கோவின் ஒரு அங்கமான, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association- ASIFA), 2002 ல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.              

சகோதரி நிவேதிதா பிறந்த தினம்

Image
சகோதரி நிவேதிதா பிறந்த தினம்   சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911), (இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது). கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார். பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்; இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த வெளி நாட்டினர்களில் முக்கியமானவர்; விவேகானந...

அரசியலுக்கு குட்பை சொல்லும் ரஜினிகாந்த்

Image
அரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த்?                             எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை? சென்னை: அரசியல் கட்சியை தொடங்கும் முடிவையே நடிகர் ரஜினிகாந்த் கைவிட இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கையும் தயாராகிவிட்டது; எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தும் ஆண்டுகள் ஓடியதுதான் மிச்சம். அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையுமே இல்லை. ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு மட்டும் வர வேண்டாம்.. போயஸைத் தொடர்பு கொண்ட இருவர்.. திடீர் பரபரப்பு! ரஜினிக்கு நெருக்கடி? ரஜினிகாந்தைப் பொறுத்தவரை 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என்கிற பிம்பத்தை சுமந்து வருகிறார். இதனை சில ஆண்டுகளுக்கு அவரே வெளிப்படையாக அறிவித்தார். ஆனாலும் இந்த அறிவிப்பு கூட கடுமையான நெருக்கடிகளால்தான் வெளியிடப்பட்டது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும்...

உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு:

Image
வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள் வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதையும் கிலோ ரூபாய் 80 முதல் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் ஏறி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உருளைக்கிழங்கின் அளவு வெகுவாக குறைந்தது. இதுவே உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தின் காரணமாகும் ஒருசில நாட்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாய் வரை விற்பனை ஆவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு தான் சமையலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இரண்டுமே விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்த...

நந்திதேவர் அகமுடையார் வரலாறு

Image
நந்திதேவர் அகமுடையார் வரலாறு தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். `நந்தி' என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம். `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு! என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. ஆக, நந்தியம் பெருமான் தன்னை வணங்குபவர்க்கு ஆனந்தத்தைத் தருபவர் ஆவார். நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். சிவபெருமான் இடத்தில் இருந்து சிவாகமங்களைத் தெளிந்து நமக்கு அருளினார் நந்திதேவர். ஆதலால் சைவ சமயத்திற்கு முதல் குருவாக விளங்குகிறார். நந்திக்கு `அதிகாரநந்தி' என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார். சிவபெருமான் மற்றும் சிவஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் அகம...

Yatha Drishti, tatha Srishti!

Image
  Mrithika's page today Yatha Drishti, tatha Srishti!         Confusions begin when people try to study each other. Even the mobile phones we all hold in our hand all day for years are not sold open. Reading or watching the reviews at times may mislead too. For e.g. China's products getting five stars and apple, four stars is a common thing.  Personally, not all highly appreciated books have held my interest. Likewise, trolled films have been my favourites too. Thus I decided not to go by anyone’s opinions when it comes to choosing my man.     Especially, living in a period where doctors' opinions have lost its value as they hardly save a patient, our own opinions these days do not serve us all the time either. This is my opinion and you need not take it.              Evolving into loyal from regular customers who buy products without a demo, we expect a demo from a groom or bride-to-be before finalizing the purc...

புதினா கார சட்னி

Image
புதினா கார சட்னி ம் வீட்டு சமையலறையில் கிடைக்கக்கூடிய எளிமையானவற்றை வைத்து எப்படி ஆரோக்கியம் நிறைந்த சட்னி. தேவையானவை: பச்சை மிளகாய் – 2-3 புதினா இலைகள் – 1 கப் கொத்தமல்லி – 3 கப் மாங்காய் – 1 உப்பு – ¼ தேக்கரண்டி பெருங்காயம் – ¼ தேக்கரண்டி சீரகம் – 1 மேஜைக்கரண்டி பூண்டு – 6-8 பற்கள் இஞ்சி – 1 துண்டு தண்ணீர் – ¼ கப் செய்முறை: புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி அதன் தண்டுகளை வெட்டி கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். உப்பு மற்றும் காரம் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம். நன்கு மைய அரைத்த சட்னியை காற்று புகாட ஒரு ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.