Posts

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு

Image
 சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிடக் கூடாதவை நுங்கு சர்க்கரை சாக்லெட் கரும்பு ஜஸ் கிரீம் பால்கட்டி (பன்னீர்) மாம்பழம் சீத்தாபழம் பலாப்பழம் சப்போட்டா வாழைப்பழம் காம்பளான் திரட்டுபால் குளுகோஸ் சேப்பங்கிழங்கு உருளைகிழங்கு சக்கரைவள்ளி கிழங்கு உலர்ந்த திராட்சை குளிர் பானங்கள் அளவோடு சாப்பிடலாம் அரிசி அவல் ஓட்ஸ் சோளம் கேழ்வரகு கோதுமை பார்லி அரிசி வேர்க்கடலை பாதாம் பருப்பு முந்திரிபருப்பு மக்காச்சோளம் அளவில்லாமல் சாப்பிடலாம் கீரை தக்காளி காராமணி வாழைத்தண்டு  வாழைப்பூ  பாகற்காய் சுரைக்காய் பீர்க்கங்காய் வெங்காயம் கத்தரிக்காய் பூசணிக்காய் அவரைக்காய் பப்பாளிக்காய் கோவைக்காய் வெள்ளரிக்காய் வெண்டைக்காய் முருங்கைக்காய் கொத்தவரங்காய் சீமைகத்தரிக்காய் முட்டைகோஸ் வெள்ளை முள்ளங்கி 

தீராத வயிற்று வலி பிரச்சனையா

Image
 தீராத வயிற்று வலி பிரச்சனையா ? உடனடித் தீர்வு. நமக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம். சீரக நீர் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து அதே பாத்திரத்தில் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டியைக் கொண்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை அருந்தி வந்தால் , வயிற்று வலி குணமடையும். வேப்பம்பூ வேப்பம்பூவைப் எடுத்து பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும். சுக்கு சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்...

தங்க பஸ்பத்திற்கு சமமானது செம்பருத்திப்பூ.

Image
 தங்க பஸ்பத்திற்கு சமமானது செம்பருத்திப்பூ. செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது. இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்கும் பட்டை.

Image
 உடல் எடையைக் குறைக்கும்  பட்டை. உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு. உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரியாணி, குருமா போன்ற உணவு வகைகளில் உபயோகிக்கும் இந்த மரப்பட்டையை சின்னமான் (Cinnamon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது. சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதி நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிறு வலி என அனைத்திற்கும் நிவாரணம் தரும். இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி-பாக்டீரியா இருக்கிறது. மேலும், இலவங்கத்தில் உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளது. வயிற்றுப்புண் இந்த துர்நாற்றம் மாற அன்றாட உண...

மறுக்கப்பட்ட புத்தகங்கள்

Image
  நூலக மனிதர்கள் -மறுக்கப்பட்ட புத்தகங்கள் நூலக மனிதர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான். கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் நூலகத்தைக் கூட்டிப் பெருக்கி துடைத்துப் போவார். சில நாட்கள் அவரே காலையில் நூலகத்தைத் திறந்து வைத்துவிடுவார். நூலகர் பெரும்பாலும் ஒன்பது மணியைக் கடந்து தான் வருவார். சில நாட்கள் அவர் வருவதற்குப் பத்து மணிக்கு மேலாகிவிடும். கிராம நூலகத்தில் காலை நேரம் நியூஸ் பேப்பர் படிக்க வருபவர்களைத் தவிர வேறு ஆட்களைக் காண முடியாது. அதுவும் ஒன்றிரண்டு பேரே வருவார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் காலையில் நூலக வாசலில் வந்து நிற்பதை மைதானத்திற்குச் செல்லும் போது பார்த்தேன...

ராஜேஷ்கன்னா

Image
  ராஜேஷ்கன்னா 78வது பிறந்தநாள்: “புஷ்பா,..கண்ணீரை வெறுக்கிறேன்..”‘ ஷர்மிளா தாகூரிடம் அமர் பிரேம் படத்தில் இந்த டயலாக்கை ராஜேஷ்கன்னா சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப வீடியோ டெக் ரிவர்ஸ் போகும். நிறைய பேர் ஆனந்த் படத்தை சிலாகித்து சொல்வார்கள்.. நமக்கு என்னவோ அமர் பிரேம்தான் மனுஷன் கலந்து கட்டி விளையாடி இருப்பார்.. ஆச்சரியமான விஷயம் என்றால் 1940-களில் தொடங்கி இந்தி திரையுலகை ராஜ்கபூர், தேவ்ஆனந்த், திலீப்குமார் என மூவேந்தர்கள் ஆட்டுவித்தாலும், இந்தி திரையலகின்முதல் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பெற்றது 1960களின் மத்தியில் சினிமா பக்கம் எட்டிப் பார்த்த ராஜேஷ் கன்னாதான். உபயம், 1969ல் வெளியான ஆராதனா படம்.. அதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் எதுவும் கிடையாது. முதல் படம் ஆக்ரி காட் (தமிழில் சிவக்குமார் நடித்து பூந்தளிர் என ரீமேக் செய்யப்பட்டது.. வா..பொன் மயிலே உந்தன் ஏக்கத்தில் தவிக்குதே என்ற பாடல் மெகா ஹிட்).. அதற்குப்பிறகு தமிழில் வெளியான சித்தி படத்தின் ரீமேக்கில் ராஜேஷ்கன்னா நடித்தார். பத்மினிக்கு தம்பியாக முத்துராமன் நடித்த ரோல்.இப்படி பட்ட நிலையில்தான ஆராதனாவி...

ரமணமகரிஷி (22)

Image
   ரமணமகரிஷி (22)    பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்  :   பகுதி 22 பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் 22  பகவான் ஸ்ரீ ரமணரின் சீடர்களில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும்  பாமரர்களும் இருந்தனர்.  நிரம்ப படித்தவன் தான் நிறைய கேள்விகள் கேட்கிறான். அவனுக்கு எப்போதும் சந்தேகம் இருக்கவே செய்யும். அவன் எதையும் முழுமையாக நம்புகிறதில்லை. ஆனால் கல்வி அறிவு குறைந்தவர்கள் அதிகம் கேட்கவில்லை. காரணம் அவனுக்குள் ஐயம். இருப்பதில்லை அவன்  எளிதில் நம்புகிறவன். தனக்குத்தானே கடவுள் அன்றியும் சுயத்தை அறிதற்கு படிப்பறிவு தேவையில்லை. படித்தவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஞானம்  என்பது தத்துவங்களை  கற்பதல்ல. இருதயத்தை புரிதல் (Understanding) ஆகும்.  பகவானின்  சீடர்களில் பலர் இந்துக்களாக இருந்தாலும் மற்றவர்களும்  இருந்திருக்கிறார்கள்.   பகவானின் புகழைத்  தமது நூலான "Ramana Maharishi and the path of self-knowledge " மூலம் உலகறியச் செய்தவர் ஆர்தர்  ஆஸ்ப்ரன். A Search in Secret India புத்தகத்தின் மூலம் பகவானின் புகழ் ப...