ரமணமகரிஷி (22)

  ரமணமகரிஷி (22)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 22

பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் 22


 பகவான் ஸ்ரீ ரமணரின் சீடர்களில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும்  பாமரர்களும் இருந்தனர்.  நிரம்ப படித்தவன் தான் நிறைய கேள்விகள் கேட்கிறான். அவனுக்கு எப்போதும் சந்தேகம் இருக்கவே செய்யும். அவன் எதையும் முழுமையாக நம்புகிறதில்லை. ஆனால் கல்வி அறிவு குறைந்தவர்கள் அதிகம் கேட்கவில்லை. காரணம் அவனுக்குள் ஐயம். இருப்பதில்லை அவன்  எளிதில் நம்புகிறவன். தனக்குத்தானே கடவுள் அன்றியும் சுயத்தை அறிதற்கு படிப்பறிவு தேவையில்லை. படித்தவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஞானம்  என்பது தத்துவங்களை  கற்பதல்ல. இருதயத்தை புரிதல்

(Understanding) ஆகும்.


 பகவானின்  சீடர்களில் பலர் இந்துக்களாக இருந்தாலும் மற்றவர்களும்  இருந்திருக்கிறார்கள்.


  பகவானின் புகழைத்  தமது நூலான "Ramana Maharishi and the path of self-knowledge " மூலம் உலகறியச் செய்தவர் ஆர்தர்  ஆஸ்ப்ரன்.


A Search in Secret India புத்தகத்தின் மூலம் பகவானின் புகழ் பரப்பியவர்  பால் பிரண்டன் என்பதை  முந்தைய பதிவில் குறிப்பிட்டது யாவரும் அறிந்ததே.


 ஆசிரமத்திலேயே தங்கி இருந்தவர்களில் மேஜர் சாட்விக், திருமதி தலேர்கான் (பாரசீகம்) எஸ்.  எஸ். கோஷன் (ஈராக் )

 டாக்டர் ஹபீஸ் சையது ( பெர்ஷியா )  ஆகியோரைக் குறிப்பிடலாம்.


 தவிரவும் அமெரிக்கா பிரான்ஸ், ஜெர்மனி, செக்கோஸ்லோவா கியா, போலந்து நாட்டுக்காரர்களும் அவ்வப்போது வந்து ஆசிரமத்தில் தங்கி செல்வதும் உண்டு.


 பகவான் ஸ்ரீ ரமணர் உலகைக் காக்கும் பரம்பொருள்  நினைவாகவே இருப்பது போலே, அவரது சீடர்கள் பகவானின் நினைவாகவே வாழ்ந்து,  தங்களது வாழ்வில் மன அமைதியையும், பேரின்பத்தையும் பெற்றிருந்தனர்.


 இருளில், தீபமொன்று ஏற்றி வைத்தால்,  ஒளிரும் தன்மை பெற்று இருள் போன இடம் தெரியாது, தங்களது வாழ்வில்  ஒளி தரும் சுடராய்  என்றென்றும் பகவான் அருள்பாலித்ததை  உணர்ந்தனர் அவரது சீடர்கள்.



 பகவானின் உறவுக்கார இளைஞர்  விஸ்வநாதன் என்பவர் 1923 ஆம்  ஆண்டு வந்தார். ஆசிரமத்திலேயே தங்கி விட்டார். அவர் அதற்கு முன்பு அங்கு வந்திருக்கிறார் என்றாலும் இம்முறை பகவான் அவனிடம் என்ன "உனது  பெற்றோர்களை விட்டு விட்டு வந்து விட்டாயா? "கேட்டார். உண்மையில் அவரும் பகவானைப்  போலவே எங்கே போகிறோம் என்பதை குடும்பத்திற்கு தெரிவிக்காமல் ஒரு  துண்டு சீட்டில் தகவல் எழுதி வைத்துவிட்டு வந்திருந்தார்.


 விஸ்வநாதன் பகவானின் இளமையை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் தன்னுடைய உறவினர் என்ற என்ற நினைவே அவருள் மேலோங்கி இருந்தது. ஆனால் பகவானை நேருக்கு நேர் பார்த்ததும் அவரது  உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவியது. அப்படியே தரையில் விழுந்து வணங்கினார்.


 பழைய வெங்கட்ராமனை  நான் பார்க்கலை என்று வியந்தார்.


 பகவான் சிரித்தார்" ஓ  ----- அந்த ஆளா -----அவன் மறைஞ்சி  ரொம்ப நாளாச்சு" என்றார்.


 பகவான் ஒரு சமயம் விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டிருக்கையில்,நீ பரவாயில்லை வீட்டை விட்டு வெளியேறும் போது உனக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தது. நான் வீட்டை விட்டு வந்த போது எனக்கு எதுவும் தெரியாது என்றார்  நகைச்சுவையாக.


 பகவானின் ஆசிரமத்துக்கு வந்தவருள் முருகனார் என்பவரும் ஒருவர். இவரைப் பற்றி விவரம்  நாளைய பதிவில்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி