Posts

டாக்டர் மு.வரதராசன் பிறந்த நாள் இன்று ஏப்ரல் 25.

Image
``டாக்டர்.மு.வரதராசனார் கூறிய மூன்று மந்திரங்கள்'' - பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர். இவர் தன் `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பற்றிக் கூறுகிறார். ``அப்போது எங்களின் வீடு சென்னை, ராயப்பேட்டையில் இருந்தது. ராணி மேரி கல்லூரியில் 1965-ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சிக்கிட்டிருந்தேன். சுகிசிவம் அண்ணன் எம்.எஸ்.பெருமாள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் எல்லாம் எனக்கு கிளாஸ்மேட்ஸ். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா எங்கக்கூடத்தான் படிச்சாங்க, அவங்க தெலுங்கு இலக்கியம். மொழிப்பாடமான ஆங்கில வகுப்பில் ஒன்றாக அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்கு `இலக்கியத் திறனாய்வு' வகுப்பு நடக்கும். டாக்டர்.மு.வரதராசனார்தான் எங்களுக்கு வகுப்பெடுப்பார். இந்த வகுப்பில் கலந்துக்கிறதுக்காக பச்சையப்பன் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, மா...

நீலமணி கவிதைகள்

Image
  ‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது கோடு அரசியல்வாதி கேட்கிறார் பொய் அகராதி ஒரு பிரதி காதால் ஆமாம் போடுகிறது யானை மரத்தடிப் பள்ளி கரும்பலகையில் எழுதியது காக்கை எச்சம் பல்லக்கில் ஊர்வார் அறியார் வியர்வை - நீலமணி உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம்.. அது சரி, யார் உழைத்தால் யார் உயரலாம்?” - கவிஞர் நீலமணி நடந்தான் பாரி / நடந்தான் பாரி / நடந்த மக்களின் / தோள் மீதேறிய / சிவிகைச் செல்வர் / செலுத்திய வரியால் / உருவான தேரைக் / கொடிக்கு நிறுத்தி / முதல் தடவையாக / நடந்தான் பாரி’ சுஜாதா பாராட்டிய நீலமணி கவிதை - யுகபாரதி ‘காளியம்மா காளியம்மா / ஏன் நாக்கை நீட்டுகிறாய் / நான் என்ன டாக்டரா’ - கவிஞர் நீலமணி

சித்ரா பௌர்ணமி அன்று, சித்ரகுப்தனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறை!!

Image
 சித்ரா பௌர்ணமி அன்று, சித்ரகுப்தனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறை!! சித்ரகுப்தர்வீட்டில்    வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்ரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.  எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.  இப்படியிருக்க, இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த சித்திர குப்தனை வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் வணங்க வேண்டாமா? இதற்காகத்தான் நம் முன்னோர்கள் சித்திரகுப்தனை வணங்குவதற்காக சித்ரா பௌர்ணமி தினத்தை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த தினத்தில் சித்திரகுப்தனை வழிபாடு செய்தால், நம்முடைய மன...

கொன்றை வேந்தன் | 29.சீரைத் தேடின் ஏரைத் தேடு | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 29.சீரைத் தேடின் ஏரைத் தேடு | கவிஞர் ச.பொன்மணி   விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி |

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மக்காரம் தோட்டத்தில் பொதுமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகசார்பாக வகபசூர குடிநீர்,முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி

Image
  தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும், அனைத்து மாவட்டங்களிலும் கழகத்தினர் கபசூர குடிநீர் வழங்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க  சென்னை கிழக்கு மாவட்டசெயலாளர் திரு பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனைப்படி,  65வது வட்ட கழக செயலாளர் திரு எஸ். முருகன் அவர்களின் தலைமையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மக்காரம் தோட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர்,முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  உணவு பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும்  சமூக இடைவெளி  கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.

26.4.2021 அதிகாலை 4.00 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள்

Image
 26.4.2021 அதிகாலை 4.00 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன : அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.  தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.  ஒரே சமயத்தில் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்க...

கொன்றை வேந்தன் | 28.சிவத்தைப் பேணல் தவத்திற்கு அழகு | கவிஞர் ச.பொன்மணி

Image
  | கொன்றை வேந்தன் | 28.சிவத்தைப் பேணல் தவத்திற்கு அழகு | கவிஞர் ச.பொன்மணி விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி