கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மக்காரம் தோட்டத்தில் பொதுமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகசார்பாக வகபசூர குடிநீர்,முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும், அனைத்து மாவட்டங்களிலும் கழகத்தினர் கபசூர குடிநீர் வழங்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை கிழக்கு மாவட்டசெயலாளர் திரு பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனைப்படி, 65வது வட்ட கழக செயலாளர் திரு எஸ். முருகன் அவர்களின் தலைமையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மக்காரம் தோட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர்,முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தும் முக கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.
Comments