Posts

'பணமா பாசமா' திரைப்படத்தில் இடம்பெற்ற உணர்வுப்பூர்வமான காட்சி குறித்துப் பகிரும் கலைஞானம்

Image
  'பணமா பாசமா' திரைப்படத்தில் இடம்பெற்ற உணர்வுப்பூர்வமான காட்சி குறித்துப் பகிரும் கலைஞானம்! தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குறித்தும் அவரது 'பணமா பாசமா' படம் குறித்தும் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... “இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பற்றி இன்றைய தலைமுறையினருக்குப் பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பேசும் தெய்வம்’, ‘பணமா பாசமா’, ‘ஆதிபராசக்தி’, ‘நத்தையில் முத்து’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை எடுத்தவர். அந்தக் காலத்தில் குடும்பக்கதைகள் என்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இன்றைக்கு வரைக்கும்கூட அவருக்கு இணையாக குடும்பக்கதைகள் எடுக்க ஆளில்லை. அவர் எடுத்த படங்கள் எல்ல...

ஜியோ கிளாஸ்

Image
ரும் காலங்களில் மிகப்பெரிய அளவில் செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர் ஹெட்போன் இன்னும் பல சாதனைகளை செயலிழக்க செய்யும் ஒவ்வொரு வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் கூகுள் கண்டுபிடித்த கிளாஸ் இதில் பேசும் பொழுது நம்முடைய எதிர்முனையில் பேசுபவர் நம்முடன் நேரில் பேசுவது போல் மெய்நிகர் தொழில்நுட்பம் பிரமிக்க வைக்க போகிறது இதனுடைய தொழில்நுட்பமும் வளர்ச்சியும் மிகப் பிரம்மாண்டமான அளவில் அனைவருடைய வாழ்க்கையிலும் அங்கமாக போகிறது இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்..

மாடத்தி../திரைப்பட விமர்சனம்

Image
  மாடத்தி ../ திரைப்பட விமர்சனம் சமீபத்தில் Nee Stream OTT தளத்தில் வெளியாகியுள்ள படம் இது. கண்ணில்படாதவர்களைக் காட்டும் படம் ! \ லீனா மணிமேகலையின் படைப்பில் உருவாகியிருக்கும் மாடத்தி . சாதியப் படிநிலைகளில் தீண்டத்தகாதவர்கள் வரை மட்டுமே அறிந்த தமிழ்ச்சமூகத்தில் , பார்க்கவும் தகாதவர்களாக இருக்கும் மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் முதல் திரைப்படம் என சொல்வேன் பார்க்கத் தகாதவர்கள் (Unseeable) இன்றும் , இந்த மண்ணில் இருக்கிறார்களா ? ஆச்சரியமாக இருக்கிறதா! இந்த படத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இன்னும் சாதி இருக்கிறதா என்ன என்று கேட்பது போல தான் இதுவும்.   சுமார்   ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்   சாதியின் அசுரப்பிடிக்குள் , தலித்துகளுக்கும் தலித்துகளாக , தீட்டுத்துணிகளையும் மரண வீட்டுத் துணிகளையும் சலவை செய்து கொண்டும் , பாடைகள்   கட்டிக் கொண்டும் , தலைக்கரிசியை வாங்கிக் கொண்டும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வெட்கக்கேடான   உண்...