சென்னையில் தீபாவளி பண்டிகைக்காக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக சென்னை மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். என சென்னை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது
மேலும் அந்த அறிவிப்பில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பயணித்திட கூடுதலாக 310 பேருந்துகள் இயக்கப்படும். கூடுதல் இணைப்பு பேருந்துகள் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.
Comments