வடகிழக்கு பருவமழை அடுத்த 3 வாரங்களில் தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை காலக்கட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முடிவடைந்த நிலையில்,  இந்தியா முழுவதும்


வழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதேபோல தமிழகத்திற்கு 34 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 40 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.  சென்னைக்கு 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 59 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இதில் 34 சதவீதம் அதிகமாகும். 


 


இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 


 


வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  


 


.


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,