தீபாவளி மலர் --சினிமா

இரண்டு  படங்கள் ஒரே பார்வை 


 



 


கே பாலசந்தர் இயக்குனர் சிகரம், தமிழ் சினிமாவிற்கு புது குருதிப்பாய்ச்சியவர்!  பெண்களுக்கு அவரை ஒரு படி கூடவே பிடிக்கக்காரணம் அவரது ஹீரோயின்களை புரட்சி நாயகியாக,நாம் செய்யமுடியாததை திரையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் செய்யும் போது பெண்களை தாங்களே அதை செய்வதாக உணர்ந்ததுடுண்டு !  


 


குறிப்பாக மனதில் உறுதி வேண்டும் , அவள் ஒரு தொடர்கதை சொல்லலாம்.


 


கே.பி சார் படைத்த பல முத்துக்களில் எதை எடுக்க..கோர்க்க எனும் நிலை தான்.


 


கமல்ஹாசனையும் , ரஜினி காந்த் ஐயும் திரையில்,ரசிகர்களின் மன சிம்மானத்தில் அமர்த்தி உலவச்செய்த  அவர்களின் ஆசானாகிய கேபி ஏனோ .. சூப்பர் ஸ்டார் என தனக்கென ஒரு இமேஜ் வளையத்துக்குள் சென்றபோது அவரை வைத்து கமர்ஷியலாக இயக்கவில்லை.ஆனால்..அவர் நடித்த கமர்சியல் படங்களுக்கு கவிதாலயா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.


 


 எஸ் பி முத்துராமன் அவர்கள் பல திரைப்படங்களில் சூப்பர்ஸ்டாராகக்காண்பித்திருக்கிறார்.


அதில் கேபி அவர்களின் தயாரிப்பில்..எஸ்பிஎம் இயக்கத்தில் வந்த புதுக்கவிதை. 1982 ஜூனில் வெளியான இக்கவிதை கன்னடத்தில் ராஜ்குமார், லஷ்மி நடித்து ஹிட்டான "நா நின்ன மரேயாலரே"   படத்தின் ரீமேக்! 


 


மோட்டர் சைக்கிள் சேம்பியன் கம் மெக்கானிக்  ரஜினிகாந்த் இவர் சேம்பியன்ஷிப் போட்டியில் ஜெயிக்க..அதைப்பார்த்து ஜோதி( நம் பக்கத்துவீட்டுப்பெண்ணின் லுக்கில் இருப்பார் இவர்) காதலில் விழ, இவர் அம்மா கோடீஸ்வரி சுகுமாரி..காதலுக்கு வில்லியாக,சுபமாக சேர்ந்தார்களா..எனில்..அதான் இல்லை.


 


சாதுர்யமாக ஏமாற்றி மகளை தனக்குப்பிடித்த மாப்பிள்ளை க்கு கல்யாணம் செய்விக்க , உருகி உருகிக்காதலித்த ரஜினி ஜோதியின் நினைவிலேயே..இருக்கிறார். இவர்கள் பல வருடங்கள் கழித்து சந்திக்க , பரஸ்பரம் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் காட்சிகள் , அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சீன்ஸ் ரசனை காட்சிகள்.


படபட சரிதா இடைவேளைக்குப்பிறகு அறிமுகமாகி.. சஸ்பென்ஸாக, அவர், இவர் என ரஜினியைக்குறிப்பிட ஒரு குழந்தையும் காட்டப்பட (அக்குழந்தைக்கும் பேர் உமா..தன் காதலி.. ஜோதியின் பெயரை வைத்து அதே பீல்ல..நம்ம ஹீரோ )


அக்குழந்தையின் டீச்சராக ஜோதி கண்ணில் ரீ எண் ட்ரி !! . காதல் மலருமா…திருமணமான ஜோதி எப்படி ரியாக்ட் செய்வார்..?! அத்தனைக்கும் பதிலாக இடைவெளி க்கு பிறகு வரும் காட்சிகள் பதில் சொல்கின்றன ! 


ரஜினி அவரைத்தெரிந்துக்கொள்ள ஆர்வமாக..பல யூ டர்ன்களை கடந்து.. ஒருவரையொருவர் உணர்ந்துக்கொள்கின்றனர்.


திருமணமானப்பெண்ணுடன் காதலன் மீண்டும் சேர்வது கொஞ்சம் புதுமையான களம் தானே ! 



நான்கே பாடல்கள்,இசை இளையராஜா.கதை, திரைக்கதை விசு .நன்றாக முடிச்சுக்களை அவிழ்க்கிறார்.


 


திருமணமாகி விதவையானப்பெண்ணுடன் சேரும் அதே காதலுடன் ஹீரோ சேர்வது புதுமைதானே ! வழக்கமான..ஸ்டைல்,கோபம்..ஆக்‌ஷன் என ரஜினி கலக்கியிருப்பார்..


 


மெக்கானிக், பொருந்தாத ஸ்டேட்ஸ் என்றக் காரணங்களால் ஒன்று சேர முடியாவிட்டாலும் , கணவனை இழந்து ஹீரோயினும் , கல்யாணம் செய்துக்கொள்ளாமல் ஹீரோவும் சேர்வது ஒரு புரட்சிதான் ! (பல படங்களில், வழக்கமாக திருமணத்தன்று ..முதலிரவிற்கு முன்பே கணவரை பறிகொடுக்கும் கன்னிக்கழியாத நாயகி என்றெல்லாம் கதையை இழுத்துப்பிடிப்பார்கள்..அது இங்கு இல்லை)


 


இதுபோலவே அடுத்தடுத்து ரிஸ்க் எடுக்க எந்த இயக்குனரும் முன் வரவில்லையா என்று யோசித்தப்போது.



கேபி சாரின் ஸ்கூலில் இருந்து வந்த அவர் அஸிஸ்டெண்ட் சரணின் டைரக்‌ஷனில் வந்தப்படம்இதற்கான பதிலை டிக் அடித்து…யெஸ் என்கிறது !


 


உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனால் என்ன ? நான் லவ் செய்வேன் என்ற ஆட்டியூடுடன் ஹீரோ அஜீத் துரத்தி துரத்திக்காதலிக்கிறார் :)



காதல் என்றாலே தற்கொலை செய்துக்கொள்ளும் மோட்க்கு போய் பயமுறுத்தும் பாசக்கார பணக்கார அப்பா க்ரீஷ் கர்னாட் அவர் ரெண்டாவது அடக்கமானப்பெண்ணாக மானு 


(அஸ்ஸாமிய நடிகை..பாவம் கலாஷேத்ராக்கு டான்ஸ் கத்துக்கவந்து.. தல நாயகி ) கண் மான் போலவே இருப்பதால் மானுவோ !!


 


நிச்சயதார்த்தம் முடிஞ்சப்பெண்ணுக்காக ரிஸ்க் எடுத்து அவ விரும்பின அவள் அக்காவை பார்க்க வைப்பதும்.. உன்னைப்பார்த்தப்பின்பு நான் நானாக இல்லையே எனப்பாடுவதும்..டைரக்டரும் எடுத்த பெரும் ரிஸ்க் தான் !


 


காதலை வெளிப்படுத்தாமல் துடிக்கும் ஹீரோயின்..முரட்டுத்தனமான மெக்கானிக் ஹீரோ (நோட் தி பாயிண்ட்..இவரும் தலைவர் மாதிரியே மெக்கானிங் !) அஜீத் கடைசிக்காட்சியில் அப்பாவைத்தாண்டி ஒரு உலகம் இருக்கு எனவும் ஒரு கத்தல் கத்தியவாறே (அப்பவே அப்படியா தல ந்னு கேக்கத்தோணுது).. வழக்கமான சினிமாத்தனத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றாமல் கைக்கோர்க்கிறார்கள் !  


இசையமைப்பாளர் பரத்வாஜ் அறிமுகமானதும் , இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிகர் விவேக் சொல்லி..மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டர் ஆர்டிஸ்டா அறிமுகமானதும் இந்தப்படத்தில் தான்!


 


ஒரே மெக்கானிக்..கதையில் புரட்சி என.. காதல் மன்னன் , பலருக்கு தூக்கம் கலைத்த மன்னனாக இருந்திருக்கிறான்.


 


ஒரு படத்தில் இன்ஸ்பையர் ஆகி..இன்னொரு படம் எடுக்கறது சகஜம் தானே ! 


என்ன..இப்போதெல்லாம்..கொரியன்.. ஈரானியன் பட காட்சிகள்..அந்த தீனியை தருகின்றன.!


---- சுமிதா ரமேஷ்.


 


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள்



அந்தநாள் திரைப்படம்


தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார்.


பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். ” பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். “என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார்.


இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்]


 


திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது இதிரைப்படங்கள், மேனாட்டுக் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தாலும். அவற்றை, தமிழ்நாட்டு  சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஒட்டி மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். இவரின்  படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், போலித்தனமான  பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல தயாரிப்பு திறனுடன்  கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.


பல படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும், அவர் இயக்கிய திரைப்படங்களில், அந்த நாள் மிக முக்கியமானது.


 


முதல் முறையாக, உலக திரைப்பட விழா, 1952ல், சென்னையில் நடந்தபோது திரைப்பட அரங்குகளிலும், தினமும் நான்கு காட்சிகள் என, பல மொழி படங்கள் திரையிடப்பட்டன. முதல் முறையாக உலக திரைப்பட விழா நடந்ததால், சென்னையில் நடந்ததால் அனைத்து தியேட்டர்களிலும், திரை உலகினர் அலை மோதினர். அந்த விழாவில்  மிகவும் பேசப்பட்ட  படங்களாக  பைசைக்கிள் திவீஸ் என்ற இத்தாலி மொழி படம், ரஷோமான் மற்றும் யாகிவாரிஷோ ஆகிய ஜப்பான் மொழி படங்கள் இரண்டும் தான் இருந்தது
ரஷோமான் படம் , இந்திய திரை உலகமே வியந்து பாராட்டிய படமாகும். இதை இயக்கியவர், உலக அளவில் பேசப்பட்ட, 'அகிரா குரஸோவா...''


 அந்த நாள் படமும் இந்த படத்தின் பாதிப்பில் உருவானது, வீணை எஸ்.பாலசந்தர். AV.மெய்யப்பச்செட்டியாரை பார்க்க வந்தார், ஏற்கனவே, பொம்மை மற்றும் கைதி திரைப்படங்களை இயக்கிவர். ரஷோமான் படத்தை, எஏ வி எம் , ஏற்கனவே ஜப்பானில் பார்த்திருந்தார், 'ரஷோமான் கதை பாணியிலேயே, நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஏவி.எம்., பேனரில் எடுக்கலாம்...' என்றார், பாலசந்தர்.
கதையை கேட்டதும், ஏ வி எம்க்கும் பிடித்து போகவே, சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டு, சில நாட்களிலேயே, 1,000 அடி, 'பிலிம்'களில் காட்சிகளை எடுத்திருந்தார், பாலசந்தர்.
எப்போதுமே சில படங்களின் காட்சிகளை எடுத்த வரை போட்டு பார்த்து, அதில் ஏதாவது குறை இருந்தால், சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் ஏ வி எம்
தான் எடுத்த காட்சிகள் வரை போட்டு காட்டினார், பாலசந்தர். காட்சிகளை பார்த்தவர், 'நீங்கள் எடுத்த காட்சிகள் முழுவதையும் மீண்டும் படம் பிடிக்க வேண்டும். ஏனென்றால், என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, இப்போது பார்த்த காட்சிகளில் இல்லை. மேலும், நீங்கள் மிகவும் நம்பிய நடிகர், கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை...' என்றார், தந்தை.
'ஒரு சிறந்த வங்காள நடிகர். மேடையிலும், திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு உண்டு...' என்று வாதிட்டார், பாலசந்தர்.


(இவர்தான்   பாலு மகேந்திராவின் மூடு பனி  படத்தில் பிரதாப்போத்தனுக்கு மாமாவாக நடித்தவர்)
என் தந்தை யோசித்து சொல்வதாக கூறி, இரண்டு நாட்கள் கழித்து, 'சிவாஜி கணேசனை நாயகனாக போட்டு எடுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் சொன்ன கதை போல, படம் நன்றாக அமையும்... மேலும், ஜாவர் சீதாராமனை வைத்து கதையில் சிறிய மாற்றத்தை செய்யுங்கள்...' என்றார்.
அவ்வாறே வேண்டிய மாற்றங்களை உடனே செய்து படமாக்கினார், பாலசந்தர். முதலில் அந்த படத்துக்கு, ஒருநாள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின், ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, சிவாஜிகணேசன் நடித்தபோது, அந்த நாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
அன்றைய சினிமாவில் பாடல்கள் இல்லாமல், திரைப்படம் எடுப்பது மிகவும் அரிது. பாடல்களே இல்லாமல் உருவான, அந்த நாள் ஒளி அமைப்பிலும், கேமரா நகர்வுகளிலும் புதிய பாதையை வகுத்தது. வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.


.படத்தைப்பற்றி


அந்த நாள் திரைப்படத்தில், மொத்தப் படமும், இரண்டு துப்பறியும்  இன்ஸ்பெக்டர்கள், நடந்த கொலையை விசாரிப்பதாகத்தான் அமைந்திருக்கும். அந்த விசாரணையின் போது, விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாது என்பது, திரைக்கதையின் அம்சமாகும. கதையின் பின்புலமும் சுவாரஸ்யமானது. இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், எதிரி நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. வில்லன பாத்திரம் போல தோன்றினாலும் சிவாஜிகணேசன் மிகஅனயாசமாக நடித்திருந்தார்  ஒரு க்ளாசிக் படம் என்றாலும், இத்திரைப்படம் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.


சி.ஐ.டியாக வரும், ஜாவர் சீதாராமன், அழுத்தமான குரல் உச்சரிப்பு இந்த படத்திற்கு மிக பிளஸ் பாயிண்ட் என சொல்லாம் லாஜிக்காக வசனம் பேசி, துப்புத் துலக்குவது, பார்க்க சுவாரசியமாக இருக்கும்.


திரைப்படக்குறிப்புகள்


1954 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாள்  திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 


 


மற்றும் பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.


இன்னொரு முக்கிய நடிகர் ஜாவர் சீதாராமன் ஆவார்


 


இவரைப்பற்றி அனைவரும் அறிவார்கள் தமிழ் நாவலாசிரியர்


அவர் எழுதிய திகில் கதைகளான  மின்னல் மழை ,மோகினி மற்றும உடல், பொருள் ஆனந்தி குமுதம் வார இதழில தொடராக வந்து திகிலுட்டி சக்கைப்போடு போட்டன.


ஜாக்சன் துரைனா இவர் ஞாபகம் வரமால் போகாது


வீரபாண்டய கட்ட பொம்மன் படத்தில் நடிகர் திலகத்துடன் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் மறக்க இயலாது


பட்டினத்தில் பூதத்தில் இவர் தான் கதாநாயகன் என சொல்லலாம் ஜீ பூம்பா இவர்தான்


இவர்களைத்தவிர பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.. .


இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு என சொல்வார்கள் . இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை


தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள் நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம் `அந்த நாள்.' சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட `பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு' என்று மட்டும்தான் காட்டப்படும். மேலும், `அந்த நாள்'தான் நோயிர் (noir) என்று அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்



















































இயக்குனர்



சுந்தரம் பாலச்சந்தர்



தயாரிப்பாளர்



ஏ வி எம்



கதை



ஜாவர் சீதாராமன்



இசையமைப்பு



ஏ வி எம் இசைக்குழு



நடிப்பு



சிவாஜி கணேசன்
பண்டரிபாய்



ஒளிப்பதிவு



மாருதி ராவ்



படத்தொகுப்பு



எஸ். சூரியா



வெளியீடு



1954



கால நீளம்



130 நிமிடங்கள்



நாடு



இந்தியா



மொழி



தமிழ்



படத்தைப்பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்


https://youtu.be/6XHWa7vfTl4


உங்களுக்கு நேரமிருந்தால் திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம்


-------umakanth



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,