பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைப்பு 4ஜி சேவைக்கு அனுமதி

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை


 பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைப்பு


 


          பிரதமர் மோடி தலைமையில்  இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  4ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.  பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.


 


            நிதி நெருக்கடியில் தள்ளாடும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது .இரு நிறுவனங்களுக்கும் கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய் கூட்டுத் தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், புத்துயிர் திட்டத்திற்காக பி.எஸ்.என்.எல்.க்கு ரூ.10,000 கோடியும்  மீதமுள்ள ரூ .4,000 கோடி எம்.டி.என்.எல்.க்கும் வழங்க  திட்டமிடப்பட்டு உள்ளது.


  ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் (வி.ஆர்.எஸ்) போன்ற திட்டங்களுக்கும், 4ஜி ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்குவதற்கும், சொத்துக்களைப் பணமாக்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதனால் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு, போட்டி சந்தையில் போட்டியிட முடியும்.


  டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நிறுவனமும், நாட்டின் மற்ற பகுதிகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்து வருகின்றன. 2002 முதல் 2005 வரையிலான காலக்கட்டம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பொற்காலமாக இருந்தது. அப்போது பி.எஸ்.என்.எல். சிம் கார்டு வாங்க எல்லோரும் விரும்பினர். 


   தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையைத் தொடங்கி இருந்தன. இருந்தபோதிலும் பி.எஸ்.என்.எல். சேவைகள் பிரபலமானதால், பி.எஸ்.என்.எல். செல் ஒன் சேவைக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு கிடைத்தது.


   2006 முதல் 2012 வரையிலான காலம்தான் பி.எஸ்.என்.எல்லின் இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.2014 முதல் 2017 வரையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் புதிய நம்பிக்கை பிறந்தது. அப்போது இந்த நிறுவனம் நடைமுறை காலத்தில் லாபம் ஈட்டியது..


   பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு 163,000  ஊழியர்களையும்  எம்டிஎன்எல் 22,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது என்றும் எகனாமிக்ஸ் அறிக்கை கூறுகிறது.


   தற்போது உலகம் 5ஜி அலைக்கற்றையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இது நாள் வரையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றையே இல்லை என்பது மிகவும் வருத்தற்குரியது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,