கவிதை தென்றல்
அலங்காரம்
கட்டறு கூந்தல்
விரித்து மற்றையப்
பெண்போலே மாநகர்
எரிக்கப் போந்தீரோ
விரித்த. சிகையினை
வீணே பழிதீர்த்தார்
மாண்டப் பின்னே
சீருர. சீவி முடித்த
துருபதைப் போலே
ஏதும் சபதமேற்றீரோ
எத்தனை யுரைத்தாலும்
என்னடீ காலமிது
எங்கே நோக்கினும்
யௌவனப் பெண்டீரும்,
பெருங் கிழத்தியும்
அலைந்தாடும் கூந்தலும்
அணுத்துகளாய் திலகமிட்டும்
அலைகின்றனரே அழகுயிதென்று.......
உமாராமசந்திரன்,
புதுவை
Comments