மகாத்மா காந்தியின் தபால் தலை பிரான்ஸ் நாட்டில் வெளியீடு
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நேற்று( 2/10/2019 )இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலையை நேபாளத்துக்கான இந்திய தூதர் மன்ஜிவ் சிங் பூரி திறந்து வைத்தார். சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பாலஸ்தீனத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது
. இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரான்ஸ் நாட்டின் தபால் சேவை நிறுவனமான லா போஸ்டே, மகாத்மா காந்தியின் உருவப்படத்தைக் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.
உஸ்பெகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
Comments