சமையலறை பக்கம்
சமையலறை பக்கம்
- ப்ரைடுbread அவல்
தேவையானவை
அவல் - 1 கப்
வெங்காயம் - 1கப் நறுக்கியது
தக்காளி - 1 கப் நறுக்கியது
குடை மிளகாய் - 1 நறுக்கியது
காய்ந்த மிளகாய் -2 நறுக்கியது
பிரட் துண்டுகள் - 10 சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 6 No's
உப்பு - pinch
எண்ணெய் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
செய்முறை
அவலை தண்ணீரில் நனைத்து 5 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து தட்டில் உலர்த்தவும்.
பிரட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து உதிர் உதிராக தட்டில் பரப்பவும் .
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, மற்றும் கறிவேப்பிலையை , காய்ந்த மிளகாய் தாளிக்கவும் .
பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் நறுக்கிய குடை மிளகாயை இட்டு
சிறிது நேரம் வதக்கவும்.
நன்கு வதக்கியப் பின் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேரத்து நன்கு கிளற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
பின் இதனுடன் முதலில் நனைத்த அவலை சேர்த்து நன்கு 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும் .
பின் இதனுடன் நனைத்து உதிர்த்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும் .
சுவை மிகுந்த சத்து திறந்த lunch item ready .
அவல் வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்தது .
பிரட்டும் கூட சேர்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் .
-மஞ்சுளா யுகேஷ்
Comments