நடிகை சவுகார் ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.
நடிகை சவுகார் ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது.. ஆர்.கண்ணன் இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது
இந்த படத்தில் சவுகார் ஜானகி நடிப்பது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது:-
“சந்தானத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சவுகார் ஜானகியை அழைத்தபோது எனக்கு வயது ஆகி விட்டது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். கதையை கேளுங்குள் பிடித்து இருந்தால் நடியுங்கள் என்று சொல்லி பெங்களூருவில் வசிக்கும் சவுகார் ஜானகியை சந்தித்து கதை சொன்னோம்.
அவருக்கு பிடித்துபோய் உடனே நடிக்க சம்மதித்தார். இது அவருக்கு 400-வது படம் என்றும் கூறினார். தில்லு முல்லு படத்தில் எப்படி ரஜினிகாந்துடன் இணைந்து சவுகார் ஜானகி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது போல நகைச்சுவை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த வயதிலும் வசனங்களை நன்றாக நினைவில் வைத்து பேசினார். சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சந்தானம், சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இந்த படத்தில் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.” இவ்வாறு இயக்குனர் கண்ணன் கூறினார்
Comments