ராகுல்காந்தி கிரிக்கெட் விளையாடினார்.
அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அரியானாவில் உள்ள மகேந்திரகர் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர், தனது ஹெலிகாப்டரில் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.
அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ரிவாரி என்ற இடத்தில் உள்ள கேஎல்பி கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ராகுல், அவர்களுடன் தானும் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
Comments