பிகில் படத்தின் டிரைலர் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் படக்குழு அறிவிப்பு
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள 'பிகில்' படம். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின்
டிரைலர் வரும் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, இதைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிகில் டிரைலர் ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
Comments