கவிதை தென்றல்
என்ன செய்யட்டும் நான்...
+++++++++++++++++++++
நடந்து போகையில்
எல்லாம்
நலம் விசாரிக்கும்
அச்சரக் கொன்றை மரம்...
நான் கவிதைக்காரி
என்று தெரிந்தும்...
நீ என்பொருட்டு
ஏதேனும் அம்மரத்திடம்
சொன்னாயா என்ன.??
இன்றைக்கு
வெட்கத்தில் சிலபூக்கள்
உதிர்க்கிறது....
நீயாகத் தெரியும்
இக் கணங்களை
என்ன செய்யட்டும் நான்..
-கலைச்செல்வி
Comments