அசுரன்


திரைப்பட விமர்சனம்


        வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே ஏற்பட்ட  நிலத்தகராறில்  சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்கவும் மிக வேகமான அசுர வேகத்தில்  ஆரம்பம் அசுரன்.


 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நான்காவது படம் அசுரன். , ஜி.வி யும் இணைந்துள்ளார்


. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள அசுரன் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு தனுஷ் தோற்றங்களில் நடித்துள்ளார். எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளி வந்துள்ளது . ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் அமர்க்களம்  வெற்றிமாறன் - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி இன்னொரு  வெற்றி படத்தை தந்துள்ளனர்.


 எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை பரிபூரணமாக சிதைக்காமல் படத்தை தயாரித்துளளனர் என சொல்லலாம்


இந்த நாவலை பலர் படித்து இருக்கபோவதில்லை


ஆகவே நாவலை போல படம் இல்லை என சொல்லமாட்டார்கள்


எந்த நாவல் தான் இது வரை  சிதைக்காமல் எடுக்கப்பட்டுள்ளது


 ஆனால் வெற்றிமாறன் சில காட்சிகளை உணர்வுபூர்வமாக எடுத்துள்ளார். என்றே சொல்ல வேண்டும். கோவில்பட்டி கதைக்களம். சாதிய வன்மத்தால் இரு பிரிவினர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மிகவும் அழகாக படமாக்கியுள்ள வெற்றிமாறனை பாராட்ட வேண்டும்


படத்தில்  எந்த இடத்திலும் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்ததாற்ககாவும் கூடு.


 மஞ்சு வாரியார். சிவசாமி தனுஷின் மனைவியாக, பச்சையம்மாளாக வாழ்ந்திருக்கிறார் . இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என அழகான குடும்பம். இந்த சாதாரண குடும்பம் எப்படி கொலை, இடப்பிரச்சனை, ஜாதி வேறுபாடு, வன்மம் போன்ற பல பிரச்சனைகளால் சின்னா பின்னமாகிறது என்பது தான் கதை. பிரகாஷ் ராஜ் படத்தின் இடைவேளைக்கு பின், ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் அவரின் சிறப்பான திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கர் போல சித்தரிக்கப்பட்டுள்ள பிரகாஷ் ராஜ் ஒரு வழக்கறிஞராக பட்டியலின மக்களுக்காகவும் அவர்களின் நியாயத்திற்காகவும் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலித் மக்கள் தான் இவர்கள் என்று எந்த வசனமும படத்தில் இல்லை


 உடை, அவர்களது நியாமான கோபம், மற்றவர்கள் அவர்களை செய்யும் அடக்குமுறை, இவைகளை வைத்து நாம் காட்சியின் தன்மையை நன்கு ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். மோசமான போலீஸ் ஆக  இயக்குநர் பாலாஜி சக்திவேல். கோவில்பட்டியின் முகமாகவே மாறியிருக்கிறார் கென்.


 வில்லன் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் வன்மம் கொண்டவராக நடித்துள்ளார். தனுஷின் முத்த மகனாக முருகனாக டீஜெய் அறிமுகமாகியுள்ளார்... 15 வயதுடைய இரண்டாம் மகனாக வரும் கென் கருணாஸ் படத்தின் திருப்பு முனைர். அண்ணனை கொன்றவனை பழிவாங்குவதற்காக கொலை செய்ய துரத்தும் சிதம்பரம், அதன் பிறகு ஒட்டுமொத்த தனுஷின் குடும்பமே காட்டுக்குள் சுற்றித் திரிகிறது. அவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி மீளுகிறார்கள் என்பதே மீதி கதை.


 சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மிகவும் அழுத்தமாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்களும் மிகவும் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளன.


செருப்பு போடுவதால் கூட இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்பதை உருக்கமாக காட்டியுள்ளார் இயக்குனர். அவரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.


. ஒரு சில பாடல்களில் கண்ட்டினியுட்டி சரியாக இல்லை . ஒரு பெரிய எதிர்பார்ப்புள்ள படம் என்பதால் இன்னும் கவனமாக செலுததியிருக்கவேண்டும


 படத்தின் முதல் பகுதியில் முழுமையாக தனுஷ் அப்பா கதாபாத்திரத்திலும் இரண்டாம் பகுதியில் இளமையான கதாபாத்திரத்தில் தான் சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளை தன் மகன் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக ஒரு அசுரவதத்தை செய்கிறார் தனுஷ். நம்மிடம் இடம், பணம் என எது இருந்தாலும், அதை மற்றவர்கள் அபகரித்து கொள்வார்கள். நம்மிடம் இருந்து பிடுங்கி கொள்ள முடியாத ஒரே விஷயம் நம்முடைய படிப்பு தான் என்று தனுஷ் தன் மகன் கென்க்கு கொடுக்கும் கிளைமாக்ஸ் அட்வைஸ் பிரமாதம் .  வெற்றிமாறன், , திரைக்கதையால்  அழகாக அனைவரையும் மிக இயல்பாக  நடிக்க  வைத்து உள்ளார். வழக்கமான வெற்றிமாறன் படம், அதே மேக்கிங் என்று சிலர் சொன்னாலும் எடுத்துக்கொண்ட விஷயமான , சமூக அக்கறை, அவரது நேர்த்தியை காட்டுகிறது. மிகப்பெரிய அளவில் இந்த படத்தை ப்ரமோஷன் செய்தவர் கலைப்புலி எஸ்.தாணு. அவர்களை மிகவும் பாராட்டலாம்


 -பேபி சம்பந்தம்


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,