தீபாவளி மலர் --கவிதை

தீபாவளி:


****


மூன்றாம் சாமத்திலெழும்பி, ஐப்பசி அடைமழையில் ,


இழைக்கோலமிட்டு  வீடெங்கும்   அகல்விளக்குகளை ஏற்றி


பசுஞ்சாணத்தில் பிடித்த பிள்ளையாரின் முன்னே


அருகோடு நல்லெண்ணெயை வைத்து வணங்கி


சிறுசுகளை கிழக்கமர்த்தி பெருங்கிழத்தி  தலைக்கெண்ணெய்வைக்க


சீயக்காயிட்டு குளித்து, தெய்வங்களை தொழுது


இடைக்கு கீழ்நீண்ட இரண்டரையடி அடர்கூந்தலை


தளரப்பின்னி தலைநிறைய


வாசமிகு மலர்சூட்டி


புத்தாடை  அணிந்து வெடிகளை வெடித்து


அடுப்படியில் அம்மா செய்த


அதிரசம்


முறுக்கு, எள்ளடை தினையடை,கம்படையென்று


அனைத்தையும் தின்றால் செரித்திட லேகியமுமுண்டு


சிட்டாய் பறந்து வீதியிலுள்ளோரை


வாழ்த்தி


பட்சணத்தை பறிமாறும் பண்டைய தீபாவளியெங்கே?


 ஷாம்பிட்ட கூந்தல் காற்றில் பூவின்றியலைய,


கடையில் வாங்கி இலையை நிறைக்கும் வண்ணங்களான


இனிப்புக்களை தின்று


நேற்றே அண்டை, அயலாருக்கு பட்சணம் தந்து


தொலைக்காட்சியிலும், அலைபேசியிலும் நேரத்தை தொலைக்கும்


இக்கால தீபாவளியும் இனிய தீபாவளிதான்,


 


உமாராமசந்திரன்,


புதுவை.


 


 


 


2   


ஓளி வெள்ளம்தீபத்தின் ஓளி வெள்ளம் போல


இனிய வார்த்தைகளால்பிறரை மகிழ்வித்து,


 


பூப்பூவாய் பொழியும் பூவாணம் போல


புன்சிரிப்பால் அகம்  நிறைத்து,


 


 பின்னல்களால் ஒன்றிணைந்த சரவெடிகள்  போல


உறவுகளால் நாம் இணைந்து,


 


திகட்டுகின்ற இனிப்புகள் போல


இன்பத்தால் திளைத்து,


 


சிறிதளவு லேகியம் போல


பட்டாசுகள் கொளுத்தி,


 


புள்ளுயிர்க்கும்


பூமித்தாய்க்கும்


பாதிப்புகள் ஏதுமின்றி,


 


இயற்கையோடு ஒன்றிணைந்து


 


தீப ஒளியேற்றி


தீபாவளியை


இன்பமாக கொண்டாடி மகிழ்ந்திடுவோம்


 


---நிர்மலா ராஜவேல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,