முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.



 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி