ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணாகண்ணதாசனின் ,இன்றைய 17.10.2019 நினைவுநாளில்


தான் ரசித்த ஒரு திரைப்பாடலை நம்முடுன் பகிர்ந்து கொள்கிறார் திரு மோகன் (திரை இசை ரசிகர்)


இதோ உங்களுக்காக!


பாடல்  :ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா


 பாடல்  : கண்ணதாசன்


படம் :அவன்தான் மனிதன்


 


 இந்தப் பாடலில் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தத்துவத்தை சொல்லியிருக்கிறார் .


 இரண்டாம் சரணத்தில் "கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்....


 உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா! இதை உணர்ந்து கொண்டேன்.... துன்பமெல்லாம் விலகும் கண்ணா" .....


 ஆசையே துன்பத்திற்கு காரணம் அதை விலக்கி விட்டால் வாழ்வில் இன்பம் சேரும் என்ற  பெரிய தத்துவத்தை அனைவரும் புரியும்படி சொல்லி இருக்கிறார்..


 முதல் சரணத்தில்


நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு மன்னனை குறித்த கதை தொடர்பானது


 தன் செல்வங்களை எல்லாம் தானமாக கொடுத்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மன்னன் முன் கடவுள் தோன்றி  வரம் கேட்கிறார்... அப்போதும்கூட அந்த மன்னன்


பிறர் துன்பங்களை தான் வாங்கி க்கொண்டு  , அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனதை தனக்கு வழங்குமாறு ஒரு  வரத்தை  கோருகிறார்.


( தகவல் உபயம், வழக்கறிஞர் சுமதி)


 இதையேகண்ணதாசன் இந்தப் பாடலில் உபயோகித்துள்ளார். (பகைவர்க்கருள்வாய்!)


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே


' அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே'


 என்ற  திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் வரிகளை கண்ணதாசன் இந்த பாடலில் உபயோகித்து ள்ளார் என்று அறியப்படுகிறது..


சிவாஜி ,கண்ணதாசன் டி எம் எஸ் ,எம் எஸ்.வி கூட்டணி யின் சாகாவரம் பெற்ற இந்தப்பாடலில்


கதாநாயகனின் மனநிலையை பாடலின் முதல் சில வரிகளிலேயே சொல்லிவிடுகிறார்


என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு


எப்படி ஒரு விளக்கம்!


படக்காட்சியை விரிவாக பார்க்கலாம்


சிவாஜி கணேசன்


சிவாஜி இந்த  படத்தில் ஒரு புதுவிதமான உடல்மொழியை கையாண்டிருக்கிறார்.. கைகள் மற்றும் முகபாவங்களை  வைத்தே மொத்த பாடலையும் கையாண்டிருக்கிறார்!!


ஒரு புது ஸ்டைல்!


 சில இடங்களைக் குறிப்பிடுகிறேன்.


 


1) என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு  என்ற வரிகளில் "அனுபவத்தில்' என்று சொல்லும் போது தனது வலது புருவத்தை மட்டும்  உயர்துவதாகட்டும்


(1:20-24)                                                                    


2)"பகைவர்களை வென்று விட்டேன் அறிவினாலே -ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே " என்ற வரிகளைப் பாடும் போது நடந்து வந்து ஒருவிதமாக உடலை சாய்த்து தன் இரு கைகளாலும் உனர்வைவெளிப்படுத்துவதாகட்டும்( 1:25-1:37)


இது ஹிந்தி நடிகர் திரு பிரான்  அவர்களின் ஸ்டைல்!


3). சிரித்துக்கொண்டே வந்து அழுகிறார்(2:01-2:15)


இன்னொரு இடத்தில்


 அழுதுகொண்டே வந்து சிரிக்கிறார்...( 2.50-2.56)


4) பாஞ்சாலிஉன்னிடம்..


நானிருக்கும்நிலையில் இங்கு என்ன கேட்பேன்


என்ற இடத்தில் சற்று வளைந்து கைகளை விரித்து சிவாஜி காட்டியிருக்கும் உடல் மொழி ....ரொம்ப ஸ்டைல்!


(2.37-2.44 )


5) கடைசி சரணத்தில்


"கடளலவு கிடைத்தாலும் மயஙக மாட்டேன்...


துன்பமெல்லாம் விலகும்கன்னா" .என்ற நான்கு வரிகளுக்கு


தன் உடலாலும் கைகளாலும் சிவாஜி வெளிப்படுத்தியிருக்கும் மென்மையான பாடி லேங்குவேஜ்!


அந்த குழந்தையை எவ்வள்வு மென்மையாக கையாள்கிறார் பாருங்கள்...


( இப்போதையகதாநாயகர்கள் (கமல் தவிர்த்து) யாரையாவது இந்த பாடலில் காட்டிய ஏதாவது ஒரு  எக்ஸ்பிரஷனை காட்ட சொல்ல வேண்டும்..


அவ்வளவுதான்......!


சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள்!


சான்ஸே இல்லை..


நடிகர் திலகத்துக்கு இணை அவரேதான்!


https://youtu.be/RnYJGaTQ928T.M சௌந்தராஜன்


பாடலின் முழு அர்த்தத்தையும் உள் வாங்கிக்கொண்டு பாடியிருக்கார்.


தன் குரலில் வெளிக்கொண்டுவந்திருக்கும் உனர்வு அபாரம்!


 M.S, விஸ்வநாதன்


பாடலின் உணர்வையும், வரிகளின் அர்த்தமும் புரியும்போது,மனம் கனத்து,  கண்களில் நீர் கோப்பது நிச்சயம்!


அப்படி இந்த  உனர்வை மெட்டில் கொண்டுவந்துள்ளார்.


 


சில பாடல்கள் நம்மை உற்சாகப்படுத்தும்.....


 


சில பாடல்கள் நம்மை சந்தோஷப்படுத்தும்


 


சில பாடல்கள் நமக்கு நிம்மதியை கொடுக்கும்ஆனால் ஒரு சில பாடல்கள் தான் நாம் துவண்டு போகும்போது நம்மை தூக்கி நிறுத்தி, ஆசுவாசப்படுத்தி


வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லி நம்மை சகஜ நிலைக்கு கொண்டு வரும்


  ...அப்படிப்பட்ட பாடல் தான் கண்ணதாசன் அவர்களின் இந்தப்பாடல்  


தமிழ் திரையிசையில் வாராது வந்த இந்த  நான்கு ஜாம்பவான்களின்  சேர்ந்திசை!


கண்ணதாசனின் ,இன்றைய நினைவு நாளுக்காக


-மோகன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,